-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label வெற்றியின் இரகசியம். Show all posts
Showing posts with label வெற்றியின் இரகசியம். Show all posts

Wednesday, August 26, 2015

போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.

வெற்றி பெற வேண்டுமானால் போட்டியில் பங்கெடுக்க வேண்டும். முயற்சியும் எதிரிகளும் மட்டுமே வெற்றியைத் தேடித் தர முடியும். தீவிரமாக முயற்சி செய்ய வேண்டிய நிலை எதனால் ஏற்படுகிறது?. நினைத்ததை எளிதில் அடையமுடியாததனால் தான். எளிதில் அடைய முடியாமல் இருப்பதற்கு  தடைகற்களாக இருப்பதெல்லாம் எதிரிகள் தான்.  எதிரிகள் மனிதனாகவோ விலங்குகளாகவோ தான் இருக்க வேண்டியதிலலை.  எதனை வெற்றி கொள்கிறோமோ அது தான் எதிரி. கோபத்தை வெல்வதும் வெற்றி தான். தேர்வில் மற்ற மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுவதும் வெற்றி தான். கோபம் மனம் சார்ந்தது. மதிப்பெண் மனிதன் சார்ந்தது. ஆனால் முயற்சியும் வெற்றியும் ஒன்று தான்.

தொழில் அல்லது வேலையில் வெற்றிபெற ஜோதிடம் கூறும் சூட்சுமங்கள்

3ம் பாவம் முயற்சி 6ம் பாவம் எதிரிகள். இந்த இரண்டு பாவங்களை வைத்து போராடும் குணம் மற்றும் வெற்றிபெறும் நிலை ஆகியவற்றை கணிக்க முடியும்.   போட்டியில் பங்கெடுக்கும் அனைவரும் முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் வெற்றி பெறுவது ஒருவராகத்தான் இருக்க முடியும். மற்றவர்களுக்கு இது தோல்வியல்ல.  முயற்சி. முயற்சி என்பது 3ம் பாவத்தை வைத்து கணிக்கப்படுகிறது.

முயற்சி இருவகைப்படும். ஒன்று முயற்சி மற்றொன்று விடா முயற்சி.  எடுத்த காரியத்தில் வெற்றிபெறும் வரை வெறிகொண்டு முயற்சி செய்து கொண்டே இருப்பது தான் விடா முயற்சி. 3ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தாலோ அல்லது சுப கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலோ முயற்சி இருக்கும் ஆனால் அது விடா முயற்சியாக இருக்காது. ஏதோ ஒரு காரணத்தால் விட்டுக்கொடுக்கக்கூடிய நிலை உருவாகிவிடும்.3ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் விடா முயற்சி இருக்கும். முயற்சி நன்மை தருமா என்பதை 3ம் பாவத்தின் பாக்கிய பாவமான 11ம் பாவத்தை வைத்து பார்க்க வேண்டும்.

6ம் பாவத்தில் சுபகிரகங்கள் இருந்தால் எதிரியை மன்னிக்கும் குணம் இருக்கும். அல்லது அடங்கிப் போகும் நிலை இருக்கும். 6ம் பாவத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் எதிரியை எதிர்தது போரிடும் குணம் அமையும். 3ம் பாவமும் ஆறாம் பாவமும் சுபகிரகங்கள் இருப்பது மிகவும் சாந்தமான குணத்தைத் தரும். இரண்டிலும் அசுபகிரகங்கள் இருப்பது பிடிவாத குணத்தைத் தரும்.


நன்றி.

Monday, August 10, 2015

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். 2-2-1

துன்பங்களை மாற்றி வெற்றிகளைப் பெறக்கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். இக் காலங்களில் பயம் நீங்கி செயல்கள் பிறக்கும். செய்ய நினைக்கும் செயல்களைச் செய்யும் காலம் இது. மேலும் செயல்களில் செய்யக்கூடிய மாற்றங்கள் நல்ல பலனைத் தரும்.


பாடல் - 2-2-1

தெய்வத்தின் சகாயமுண்டு தென்புவிவிருரெண்டான்றால்
வையகமீது துன்பம் வருந்திடா தனக்குயேதும்
செய்யவே தொலிலுமோங்கும் சந்தோசசெய்தி தோன்றும்
பொய் சொல்லா புனிதனாக புவிதனில் வாழ்வாயன்றோ

விளக்கம்

உனக்கு இரண்டு முறை இரண்டும் இறுதியில் ஒன்றும் விழுந்தால் எத்தகைய துன்பமாயினும் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும்.  தொழிலில் அளவற்ற லாபங்களையளிக்கும்.  பல ஊர்களிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும்.  தவிர நீ பொய்யுரையாத புனிதனாகவும் வாழ்வாய் என்கிறார்.

Sunday, August 9, 2015

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். 2-1-6

agathiyar arudam tamil 2-1-6


அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


மிகவும் அதிர்ஷ்டமான நேரம். உங்களின் எண்ணங்கள் முன்னேற்றமாக இருந்தால் இந்த நேரம் அதைத் தொடர முயற்சி எடுங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு.

பாடல்
விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழையநாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன்வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.

பாடல் விளக்கம்.

இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும். முன்னோர்களின் குடும்பவழக்குகளின் சிக்கலொழியும்.  மனையாளுக்கு கெர்ப்பம் தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும். உன் வார்த்தைக் கெதிர்வார்த்தை யிராது, கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.

Monday, June 15, 2015

எப்பொழுது வேலை கிடைக்கும்

உங்களுடைய முயற்சின் பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். முயற்சி தன் மெய் வருத்தக்கூலி தரும். ஆனால் காலம் கனிந்து வரும் வரை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். சரியான வாய்ப்புகள் வரும் வரை பொருமையாக இருக்க வேண்டும். காலம் கனிந்து வருவதை திசா புத்தி அந்தர காலங்களைக் கொண்டு கணிக்கலாம். ஜெனன ஜாதகத்தில் நாம் வாங்கி வந்த வரத்தைக் கணிக்க முடிவது போல வரம் பலன் தரும் காலத்தை திசா புத்தி அந்தரங்களின் மூலம் கணிக்க இயலும்.

பத்தாம் பாவம் தொழில் பாவம் பத்தின் பலன் 11ல் இலாபமாக கிடைக்கும். ஐந்தாம் பாவம் நம்முடைய அதிர்ஷ்டம் அல்லது முயற்சிக்கு மீறிய பலன். ஐந்துக்கு ஐநதான ஒன்பதாம் பாவம் பாக்கியமாக நமக்கு கிடைக்கக் கூடிய செல்வம். இந்த நான்கு பாவங்களும் திசா புத்தி அந்தர காலங்களுடன் தொடர்பில் இருந்தால் நிச்சயம் வேலை அல்லது தொழில் அமையும். அல்லது இருக்கும் நிலையில் நல்ல இலாபம் கிடைக்கும்.
வேலையில்லாப் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்

திசா புத்தி அந்தர அதிபதிகள் 6, 8, 12 ஆக அமையாமல் இருப்பது நலம். அப்படி அமைந்தால் என்ன செய்வது. இருக்கும் வேலையில் இருப்பதும் தொழிலில் முதலீடுகளை குறைத்துக் கொள்வதும் சிறந்தது. வேறு வழியில்லாமல் புதிதாக துவங்க வேண்டும் என்றால் 5, 9, 11ம் அதிபதிகளின் கிழமைகள் மற்றும் நட்சத்திரங்கள் நடப்பில் உள்ள நாட்களில் துவங்குவது நல்ல முன்னேற்றமான அனுபவத்தைத் தரும்.

நன்றி. 

Thursday, April 9, 2015

agathiyar-arudam-tamil-1-6-2

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஆறும் மூன்றாம் முறை இரண்டும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-6-2

பாடல்

அப்பனே ஒன்றும் ஆறும் உறுதியாய் இரண்டு வீழ்ந்தால்
தப்பாது முடியுமப்பா தானெதை நினைத்தபோதும்
ஒப்பிலா வாழ்வுண்டாக்கும் உள்ளுரிலடைவாய்லாபம்
கப்பியபகை நோய் நீங்கும் கங்கணப்ராப்தமாமே.

விளக்கம்
ஒன்றும், ஆறும், இரண்டும் விழந்தால் நீ நினைத்த எண்ணமெல்லாம் தடங்கலில்லாமல் முடியும். செல்வாக்கான வாழ்க்கையுண்டாகும் உள்ளுரிலேயே நல்ல லாபங்களெல்லாம் கிடைக்கும். பகையும் நோயும் நீங்கும், மனையில் சுப காரியம் நடக்கும் என்கிறார்.

Wednesday, February 25, 2015

புதையல் கிடைக்கும் யோகம்.

புதையல் கிடைக்கும் யோகம்.

இலக்கணத்திற்கு இரண்டாம் பாவத்தில் இரண்டுக்குடைய கிரகமும் நான்காம் பாவத்திற்குரிய கிரகமும் சந்திரனும் செவ்வாயும் (நால்வரும்) சுபகிரக பார்வையுடன் சட்பல அஷ்டவர்க்க பலத்துடனும் கூடியிருந்தால் ஜாதகருக்கு புதையல் யோகம் ஏற்படும். இரண்டு பதினொன்று ஒன்பது ஆகிய பாவங்களின் அதிபதிகள் வலிமையுடன் சுபஸ்தானங்களில் அமர அதுவும் புதையல் கிடைக்கும் யோகம் தான்.

புதையல் கிடைக்கும் யோகம் என்றால் என்ன?.  நிலத்தைத் தோண்டும் போது தான் புதையல் கிடைக்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் பார்க்கும் வேலையில் செய்யும் தொழிலில் கிடைக்கும் எதிர்பாராத  வருமானம் தான் புதையல். பங்கு வர்த்தகத்தில் ஏற்படக்கூடியெ எதிர்பாராத வருமானமாகவும் இருக்கலாம். திரும்பியேவராத பணம் என்று நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த பணம் திடீரென உங்களுக்கு கிடைக்கலாம். இப்படியெல்லாம் நடந்தால் புதையல் கிடைக்கும் யோகம் உள்ளதென்று அறியலாம். உங்களுடைய முயற்சிக்கு மேலாக உங்களுடைய உழைப்பிற்கு மேலாக கிடைக்கும் வருமானம் வருவதைத் தான் புதையல் கிடைக்கும் யோகம் என்கிறோம்.

புதையல் கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும். மேற்கூறிய கிரக சூழ்நிலைகள் இருந்தால் உங்களுக்கு புதையல் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அவ்வப்பொழுது வரும். இல்லையென்றால் நீங்கள் தான் புதையலைத் தேடிப் போக வேண்டும். எங்கே தேடுவது எப்பொழுது தேடுவது என்றெல்லாம் கேள்விகள் எழக்கூடும். இரண்டு மற்றும் நான்காம் பாவங்கள் குறிப்பிடும் திசையில் சந்திரனும் செவ்வாயும் திசாபுத்தி அந்தர காலங்களாக வரும் காலங்களில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளினால் எதிர்பாராத  வருமானங்கள் அதாவது புதையல் கிடைக்கும்.

புதையலைத் தேடிப்போக விருப்பமில்லாதவர்கள் (முடியாதவர்கள்) என்ன செய்யலாம். நீங்களே புதையலை உருவாக்கலாம். சிறுகச் சிறுக சேமித்து பெரும் புதையலை உருவாக்க முடியும். சிறுகச் சிறுக சேமிப்பதை பொருளாகவோ பணமாகவோ நல்ல நண்பர்களாகவோ தியாகமாகவோ சேமிக்கலாம்.  செவ்வாய்கிழமை சந்திர ஓரையில் நம்மால் முடிந்ததை சேமிக்கலாம். அப்படி சேமிப்பது நமக்கு தேவைப்படும் நேரத்தில் புதையலாக நிச்சயம் கிடைக்கும்.

மேலும் ...

Sunday, February 15, 2015

பாரதி யோகம் - ஜோதிடத்தில் யோகங்கள்

பாரதி யோகம் - ஜோதிடத்தில் யோகங்கள் 

இயற்கையின் முன் அனைவரும் சமமே. வாய்ப்புகளும் வசதிகளும் அனைவருக்கும் பொதுவாகவே வழங்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முறையில் தான் வித்தியாசம். வெற்றிபெற்றவர்கள் வாழ்க்கையிலும் வெற்றியை இழந்தவர்களின் வாழ்க்கையிலும் யோகங்களும் தோசங்களும் கலந்தே தான் இருக்கும். கிரகங்களின் இணைப்பையையே யோகங்கள் என்று கூறுகிறோம். ஏறக்குறைய 3000க்கம் அதிகமான யோக காரணிகள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இவற்றில் அரிதாக அமையக்கூடிய யோகங்களும் உண்டு. அந்த யோகங்களில் ஒன்று தான் பாரதி யோகம். 

பாரதி யோகம்.

இராசிச் சக்கரத்தில் 2, 5, 11ம் அதிபதிகள் (ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ) நவாம்சத்தில் இருக்கும் இடத்தின் அதிபதி, இராசிச் சக்கரத்தில் உச்சம் பெற்று 9ம் அதிபதியுடன் இணைந்திருந்தால் ஏற்படும் யோகம் - பாரதி யோகம்.

யோகத்தின் பலன்கள்.
உலகப் புகழ் பெறும் அமைப்பு, அறிஞர்கள், அழகான மற்றும் கவர்ச்சியான செயல்  அல்லது உடல், எளிதில் கவரக்கூடியவர்கள், இசையில் புலமை


Inline image 1


ஐந்தாம் அதிபதி சுக்கிரன் நவாம்சத்தில் புதன் வீட்டில் இருக்கிறார். இராசிச் சக்கரத்தில் புதன் ஒன்பதாம் அதிபதியான சனியுடன் இணைந்து கன்னியில் உச்சம் பெற்று இருக்கிறார்.
இந்த யோகம் அரிதான யோகநிலைகளில் ஒன்றாக உள்ளது.

ஒருவர் தன்னுடைய தனி்ததிறமையை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அந்தத் துறையில் வெற்றிபெற முடியும். மேலும் பாரதி யோகம் கொண்ட நிலையில் உள்ள ஜாதகர்கள் மிக விரைவில் வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பது உறுதி.இந்த யோக நிலையில் பிறந்தவர்களால் நிச்சயம் பிரபலமாக வரமுடியும். 

யோகங்கள் இருந்தும் வெற்றிபெற முடியாததற்கு காரணம், சரியான பாதையில் முயற்சி செய்யாதது தான். தெளிவான ஜோதிடர்களை கலந்துஆலோசித்து சரியான காலசூழ்நிலைகளைக் கணித்து அந்த நேரங்களில் முயற்சியை தீவிரப்படுத்தினால் நிச்சயம் வெற்றபெற முடியும்.

நன்றி.



Monday, November 26, 2012

தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்

தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்

ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்றி என்பது என்ன? நாம் செய்யும் செயல்கள் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமானால் அது வெற்றி. அது தான் மனிதனின் சந்தோசம், மகிழ்ச்சி. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழத் தேவைப்படும் அனைத்தையும் தொழிலின் மூலமே பெறுகிறோம். பிறந்த குழந்ததையின் தொழில் என்ன? உண்ணுவதும் உறங்குவதும் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அது தான் தொழில். தேர்ச்சி பெறுவது தான் வெற்றி.

பொதுவாக வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெற செய்யும் முயற்சியே தொழில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்கிறோம். பணம் ஒருவருக்கு வாழ்க்கை, புகழ் ஒருவருக்கு, நிம்மதி ஒருவருக்கு, மோட்சம் ஒருவருக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைத் தேவை. அப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய நாம் எடுக்கும் முயற்சி தான். தொழில். பொதுவாக அனைவரும் பணத்தைத் தேடித்தான் ஓடுகிறோம். நம்முடைய வெற்றியின் விளைவுகளை பணத்துடன் தான் ஒப்பிடுகிறோம். நாம் எடுக்கும் முயற்சி தொழில் என்றால் நாம் அடையும் மகிழ்ச்சி தான் இலாபம்.

தொழில் என்பதும் வேலை என்பதும் சேவை என்பதும் ஒன்றுதான். அந்தப் பொதுவான வார்த்தைக்குரிய ஜோதிட வார்த்தைதான் பத்தாம் பாவம் அதாவது தொழில் பாவம். தொழில் என்பது பணத்தை மூலதனமாக்கி பணத்தை சம்பாதிப்பது. வேலை என்பது உடலுலைப்பை மூலதனமாக்கி பணம் சம்பாதிப்பது. சேவை என்பது இரண்டையும் மூலதனமாக்கி குறைவாக சம்பாதிப்பது. ஜாதகர் என்ன தொழில் செய்யலாம் என்பதைவிட எந்தத் தொழில் செய்தால் அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒருவருக்கு அமையும் தொழில் எவ்வாறு அவருக்கு பொருளையும் புகழையும் தருகிறது என்பது தான் ஜோதிடம் கூறும் செய்தி.

கால புருச தத்துவப்படி பத்தாம் பாவமாக வருவது மகரம். மேசம் முதல் மகரம் வரை பத்து. பத்தாம் அதிபதி சனி பகவான். தொழிலுக்கு காரகத்துவம் வகிப்பவர் சனி பகவான் தான். பத்தாம் பாவம் என்பது தொழிலுக்குரிய பொதுவான பாவம். அதைத் தவிர்த்து 12 பாவங்களிலும் தொழில் தொடர்பான நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.

ஜோதிடத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்துதுறைத் தொழில்களையும் கூற முடியமா என்றால் முடியும். தொழிலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அறிவின் மூலம் செய்யும் தொழில்கள், உடல் உழைப்பின் மூலம் செய்யும் தொழில்கள், பணத்தைக் கொண்டு செய்யும் தொழில்கள். எந்த ஒரு தொழிலும் இம்மூன்றிற்குள் அடங்கி விடும்.

ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு இருந்த இடத்திலிருந்து புத்திசாலித்தனத்தால் செய்து முடித்தால் அது அறிவின் மூலம் செய்யப்பட்டதாக அர்த்தம். அதே செயலை ஓடி ஓடி உழைத்து செய்து முடித்தால் அது உழைப்பின் மூலமும், அறிவையும் உடலையும் பயன்படுத்தாமல் அடுத்தவர்களைப் பயன்படுத்தினால் அது பொருளின் மூலமும் செய்து முடிப்பதாக அர்த்தம். இதைத்தான் ஜோதிடம் விதி மதி கதி என்று கூறுகிறது. மதி என்னும் சந்திரன் மனதை ஆள்கிறது. கதி என்னும் சூரியன் உடலை ஆள்கிறது. விதி என்னும் இலக்கினம் தன்னை ஆள்கிறது. இம்மூன்றில் எது வலுவாக உள்ளதோ அதைச் சார்ந்த  முறையில் தொழிலை அமைத்துக்கொண்டால் நாம் எளிதில் வெற்றி பெறலாம்.

ஒரே இடத்தில் இருந்து வேலைசெய்வோரும் உண்டு. ஊர்ஊராக சுற்றித்திரிந்து வேலைசெய்வோரும் உண்டு. இரண்டையும் சேர்த்து அதாவது சற்று தொலைவான இடத்தில் இருந்து வேலைசெய்வோரும் உண்டு. இவற்றைத் தான் ஜோதிடம் சரம், ஸ்திரம், உபயம் என்று பிரித்துக் காண்பிக்கிறது.


மேலும் 10ம் பாவத்தை முதன்மை பாவமாக வைத்து மற்ற 12 பாவங்களுக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நாம் உணர முடியும். 12 பாவங்களுக்கும் தொழில் தொடர்பான பகுதிகள்.

இலக்கிண பாவம் – நம்முடைய புகழ் நிலை, அனுபவிக்கும் நிலை,
2ம் பாவம் – வருமானம்
3ம் பாவம் – எதிரிகளை சமாளிக்கும் மனநிலை
4ம் பாவம் – சுக வாழ்வு
5ம் பாவம் – அதிர்ஷ்டம்
6ம் பாவம் – எதிரிகள்
7ம் பாவம் – கூட்டாளிகள் வேலையாட்கள்
8ம் பாவம் – நிலைத் தன்மை
9ம் பாவம் – பாக்கியம்
10ம் பாவம் – செய்யும் தொழில்
11ம் பாவம் – கிடைக்கும் இலாபம்
12ம் பாவம் – விரயம் அல்லது நட்டம்

உதாரணமாக கூட்டுத் தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு 7ம் பாவம் மற்றும் 4ம் பாவம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இலக்கிணத்திற்கு 7ம் பாவம் கூட்டாளிகளின் மனநிலை. கூட்டாளிகளிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சி இவற்றைக் குறிக்கும். மேலும் 10ம் பாவத்திற்கு 7ம்பாவமான நான்காம் பாவம் மூலம் கூட்டணி மூலம் நாம் அடையும் நன்மையையும் குறிக்கும்.

பத்தாம் பாவம் அமைந்த ராசி, ராசியின் அதிபதி, ராசியைப் பார்க்கும் கிரகங்கள், அதிபதியைப் பார்க்கும் கிரகங்கள் இப்படிப்பட்ட நிலைகளைக் கவனமாக ஆராய்ந்தால் எது நம் உடல் மற்றும் மனநிலைக்கு உகந்த வேலை அல்லது நம்முடைய தொழில் அல்லது வேலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை புரிய வரும். சூழ்நிலையை  உணர்ந்து செயல் பட்டால் நாம் தான் வெற்றியாளர்.