பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார்.
பாடல் 2 - 2 - 6
துணையெனநம்பிடாதே தொல்லையாம் பலபேர் நேசம்
இணைபுடனிருரெண்டாறும் இடரப்பா விழுந்ததாலே
வினையமாய் தொழிலும் நஷ்டம் வந்திடும் வழக்கரும் வம்பும்
மனையிலே களவுபோகும் மனைவிக்கும் தோஷமாமே
விளக்கம்.
உனக்கு இரண்டு முறை இரண்டும் கடைசியில் ஆறும் விழுந்தால், நீ ஒருவரையும் நம்பாதே!, சில பேர்களால் உனக்கு இடர் விளையக் கூடும். தொழிலில் நஷ்டம் வம்பு வழக்குகளேற்படும். மனையில் களவு போகும். மனைவிக்கு பலவித நோய்களை காட்டும் என்கிறார்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி