-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label 1-3-3. Show all posts
Showing posts with label 1-3-3. Show all posts

Thursday, March 12, 2015

agathiyar-arudam-tamil-1-3-3

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை மூன்றும்  மூன்றாம் முறை மூன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-3-3

பாடல்
கிரகங்கள் நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு
மறைந்ததோர் பொருளுஞ்சேரும் மருந்தினால் நோயும் நீங்கும்
சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும்
அறமது புரிந்துவாழ்வாய் அகஸ்தியர் மொழிமீறாதே.

விளக்கம்

ஒன்றும், மூன்றும், மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கல்யாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.