-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label மகிழ்ச்சியான மனநிலை. Show all posts
Showing posts with label மகிழ்ச்சியான மனநிலை. Show all posts

Friday, October 26, 2018

அகத்தியர் ஆருடம் - 2-3-6

கவலைகள் மறையும் காலம். மகிழ்ச்சியான மனநிலையில் அனைவரிடமும் பழகுங்கள்


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். 



பாடல் 2 - 3 -6

நீங்கும் கவலையெல்லாம் இரண்டு மூன்றாறுமானால்
ஓங்கிடும் உனதுசெல்வம் உயருமே தொழில்தானப்பா
சோங்கிடும் தோஷம்நோயும் தொலைத்திடும் அஞ்சிடாதே
வாங்கிய கடன்தான் நீங்கி வறுமையுமகன்றுபோமே.  


 விளக்கம்

இரண்டும், மூன்றும், ஆறும் விழுந்ததால் கவலைகள் எல்லாம் நிலவைக் கண்ட இருள்போல் விலகும். செல்வம் ஓங்கும், மேலான தொழிலுண்டாகும், சகல தோஷங்களும், நோயும் நீங்கும், கடன்தீரும், குடும்பத்தின் வறுமையகலும் என்கிறார்.