-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label agathiyar arudam tamil 1-1-2. Show all posts
Showing posts with label agathiyar arudam tamil 1-1-2. Show all posts

Wednesday, February 11, 2015

agathiyar arudam tamil 1-1-2


agathiyar arudam tamil 1-1-2


அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-1-2

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.


 விளக்கம்

ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும், சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.