-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label கலையும் கலைஞனும். Show all posts
Showing posts with label கலையும் கலைஞனும். Show all posts

Wednesday, August 14, 2019

கலையும் கலைஞனும்

கலையை எப்படி வளர்ப்பது, கலைஞனை எப்படி வாழ வைப்பது.?

கலையைப் பற்றி அறிந்து தெரிந்து தெளிந்து கொள்வது தான் கலையை வளர்ப்பதற்கு நாம். ஆற்றும் கடமை. குறைந்த பட்சம் கலைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் கடமையின் முதற்படி. பண்பாடும் கலாச்சாரமும் மாறிக் கொண்டே வந்து கொண்டிருக்கும். அன்று செய்த நற்செயல் இன்று மூடநம்பிக்கையாக பார்க்கப்படலாம். இன்று சரியெனப்பட்டது நாளை தவறெனப்படலாம். ஆனால் அந்தந்த காலகட்டத்தில் படைக்கப்பட்ட கலைகள் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். நம் முன்னோர்கள் அனைத்தையும் தெரிந்து தெளிந்து அனுபவித்து பின் பகுத்து வைத்துவிட்டுத்தான் சென்றுள்ளனர்.  நாம் தான் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் கலை என்றால் என்ன? சரியான கேள்வி. இதன் பதில் இது தான்.

கலை எனப்படுவது "நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது". மனித நடத்தையினாலும் தம் கற்பனை வளத்தினாலும், கலைநுட்பத் திறமையுடன் கூடிய பொருட்கள் (அ) நிகழ்வுகளைப் புணைந்து காட்சிப்படுத்தல் (அ) அரங்கேற்றல் (அ) கைவினை கலைநயம் படைத்தல் ஆகும். இதன் மூலம் பண்பாடு, வரலாறு, அழகியல், போன்றவை பாரட்டுதலுக்காகவும், ரசிக்கும் படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டு உளவெழுச்சியில் விளைவுகளை ஏற்படுத்தும் நோக்கமுடையதாகும்.[2][3] பிற உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக்காட்டுவது கலை நுட்பமாகும். உடல் மற்றும் உள்ளத்தின் திறன்களை ஒருங்கிணைத்து கற்பனை வளத்தை ஊக்குவிப்பது கலை ஆகும்.

கலை என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் கவின் (அ) அழகியல் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும் தொழில்நுட்பக் கலைகள் (fine arts)என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.


கலைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

Saturday, August 3, 2019

கலையும் கலைஞனும்

கலைஞனின் வளர்ச்சியே கலையை வாழ வைக்கும்.

இது அனைத்துக் கலைகளுக்கும் பொருந்தும். சிற்பியின் முயற்சிதான் வணக்கத்தக்க சிலையாக மாறுகிறது. ஓவியனின் கைவண்ணம் தான் அழியா ஓவியமாக நிலைத்து நிற்கிறது.. அப்படிப்பட்ட கலைஞர்களை உலகறியச் செய்வதும் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கச் செய்வதும் தான் அந்தக் கலைக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.

எந்தவொரு கலையை எடுத்துக்கொண்டாலும் அதில் புகழ் பெற்றவர்கள் என்றால் மிகச் சிலரைத் தான் அடையாளம் காட்ட முடியும். வரலாறு அவர்களை வைத்தே அந்தக் கலையை இன்றளவும் கொண்டாடிக்  கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை அதுவன்று. கலையின் மீது உண்மையான ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்கள் மிக அதிகமான அளவில்
வாழ்ந்திருக்கிறார்கள்  இன்னமும் நம்மளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் அனைவராலும் அறியப்படுவதில்லை. காரணம். அவர்களுடைய உண்மையா கலை நுணுக்கத்தை வெளிப்படுத்த களம் அமையாதது தான்.  கலையால் புகழ் பெற்றவர்களைவிட தன்னால் கலையை புகழடையச் செய்தவர்கள் தான்
வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது அனைத்து கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பொருந்தும்.

கலை வளர கலைஞனை வாழ வைப்போம். எப்படி.....