உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label விதி. Show all posts
Showing posts with label விதி. Show all posts
Wednesday, May 9, 2018
Tuesday, November 27, 2012
தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?
ஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூறுவது தான். யோகங்கள் என்பதும் தோசங்கள் என்பதும் ஒன்றுதான். ஒருவருக்கு ஏற்புடைய கருத்து மற்றவருக்கு மாற்றுக் கருத்தாக அமையலாம் அது அவர்களின் பார்வையே அன்றி, கருத்தின் குற்றமல்ல. அதே போலத்தான் ஜோதிடத்திலும் யோகங்களுக்கும் தோசங்களுக்கும் சமநிலை தான்.
தரித்திரம் என்றால் என்ன? இல்லாமை மற்றும் இயலாமை இந்த இரண்டும் இருக்கும் நிலை தான் தரித்திரம் என்பது. தன்னிடத்தில் எதுவும் இல்லை என்று நினைப்பவருக்கும் தன்னால் எதுவும் முடியாது என்று நினைப்பவருக்கும் இந்த யோகம் இருப்பதாக பொருள்.
திரிகோணம் எனப்படும் 5, 9ம் அதிபதிகள் பலமிலந்து மறைவு ஸ்தானமான 6,8,12ல் அமர்வது அல்லது பார்வை செய்வதுவும் இந்த யோகமாகும். நல்ல மனம் படைத்த ஒருவர், தீயவர்கள் மத்தியில் தீய வேலையைச் செய்ய நியமிக்கப்பட்டது போல. இந்த யோகம் அமையும் நிலைகளில் சிலவற்றை காணலாம்.
- இலக்கினாதிபதி 12லும், 12ம் அதிபதி இலக்கினத்திலும் இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
- ஐந்தாம் அதிபதி ஆறிலும், 9ம் அதிபதி 12லும் இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
- இலக்கினத்தில் கேதுவும் இலக்கின அதிபதி 8ல்இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
- இராசி மற்றும் நவாம்சத்தில் இலக்கினாதிபதி அசுபர்கள் பார்வைபெற்று 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
இதைப் போன்ற கிரக சூழ்நிலைகளில் பிறந்தவர்களுக்கு தரித்திர யோகநிலை உள்ளது என்று பொருள். இந்த யோக நிலை 2,7 அதிபதிகளை துணைக்கு கொண்டுவருகிறது. காரணம், 2, 7ம் மாரகம் ( தன்னால் அனுபவிக்க இயலாத நிலை).
இந்நிலை உள்ளவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றால், எதையும் ஏற்றுக்கொள்ளாத, திருப்திஅடையாத மனநிலையாக இருக்கும். சாப்பிடும் போது கூட ஐயோ வயிறு நிரம்பிவிட்டதே என்றுதான் கவலைப் படுவார்கள். இதற்கு பணம் பதவி என்ற நிலை இல்லை. நம்முடைய மனம் தான் இந்த நிலைக்கு காரணம். எவ்வளவு இருந்தாலும், தானும் அனுபவிக்காது அடுத்தவர்களுக்கும் கொடுக்காத நிலையும் தரித்திர யோக நிலைதான். இவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.
மற்றொன்று, நல்ல மனம் இருக்கும், கொடுக்க பணம் இருக்காது. நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாது. எவ்வளவு சேர்த்தாலும் நோய், கடன், இவற்றிற்கு செலவு செய்துவிடுவார்கள். அப்படி பட்டவர்கள் தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே வரவேண்டும். அப்படிச் செய்தால் பல்வேறு சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்று திருப்திகரமாக அமைந்து விடும்.
இந்த யோகம் இருப்பவர்கள் கையில் பணம் இருந்தால் அது வீணாக செலவாகிவிடும். அதனால் பெற்றோர் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் பெயரில் சேமித்துவிடவும். அப்படித் தவறும் பட்சத்தில் நம்முடைய பணம் நம்மையறியாமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கரைந்துவிடும் அதற்கு பதில் நாமே அதைமுறைப்படுத்தி வைத்துக்கொள்வது நலம்.
அனைத்து யோகங்களும் அதன் திசா புத்தி அந்தர காலங்களில் தான் செயல்பாட்டிற்கு வரும் அந்த காலங்களைக் கணித்து அந்த கால கட்டங்களில் நாம் இல்லாதவர்களாக இருந்தால் எப்படி உணர்வோமோ அதே உணர்வை அனுபவிக்க வேண்டும். உண்ணா நோம்பு பசியை உணர. சாதரணமான வாழ்க்கையை உணர காவி உடுத்தி யாத்திரை போதல், நோயுற்றவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் மற்றும் உதவி செய்தல் நோயின் வலியினை உணர. இப்படி நாம் செய்யும் செயல்கள் மூலம் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டால் அது விதியை அனுபவித்ததற்கு சமமாகவும் அதே சமயம் நாம் விருப்பப்பட்டு அனுபவித்த திருப்தியாகவும் அமையும்.
Monday, November 26, 2012
தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்
தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்
ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்றி என்பது என்ன? நாம் செய்யும் செயல்கள் நாம் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமானால் அது வெற்றி. அது தான் மனிதனின் சந்தோசம், மகிழ்ச்சி. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழத் தேவைப்படும் அனைத்தையும் தொழிலின் மூலமே பெறுகிறோம். பிறந்த குழந்ததையின் தொழில் என்ன? உண்ணுவதும் உறங்குவதும் தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கு அது தான் தொழில். தேர்ச்சி பெறுவது தான் வெற்றி.
பொதுவாக வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பெற செய்யும் முயற்சியே தொழில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்கிறோம். பணம் ஒருவருக்கு வாழ்க்கை, புகழ் ஒருவருக்கு, நிம்மதி ஒருவருக்கு, மோட்சம் ஒருவருக்கு இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கைத் தேவை. அப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்ய நாம் எடுக்கும் முயற்சி தான். தொழில். பொதுவாக அனைவரும் பணத்தைத் தேடித்தான் ஓடுகிறோம். நம்முடைய வெற்றியின் விளைவுகளை பணத்துடன் தான் ஒப்பிடுகிறோம். நாம் எடுக்கும் முயற்சி தொழில் என்றால் நாம் அடையும் மகிழ்ச்சி தான் இலாபம்.
தொழில் என்பதும் வேலை என்பதும் சேவை என்பதும் ஒன்றுதான். அந்தப் பொதுவான வார்த்தைக்குரிய ஜோதிட வார்த்தைதான் பத்தாம் பாவம் அதாவது தொழில் பாவம். தொழில் என்பது பணத்தை மூலதனமாக்கி பணத்தை சம்பாதிப்பது. வேலை என்பது உடலுலைப்பை மூலதனமாக்கி பணம் சம்பாதிப்பது. சேவை என்பது இரண்டையும் மூலதனமாக்கி குறைவாக சம்பாதிப்பது. ஜாதகர் என்ன தொழில் செய்யலாம் என்பதைவிட எந்தத் தொழில் செய்தால் அவருக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கூறுவது தான் ஜோதிடம். ஒருவருக்கு அமையும் தொழில் எவ்வாறு அவருக்கு பொருளையும் புகழையும் தருகிறது என்பது தான் ஜோதிடம் கூறும் செய்தி.
கால புருச தத்துவப்படி பத்தாம் பாவமாக வருவது மகரம். மேசம் முதல் மகரம் வரை பத்து. பத்தாம் அதிபதி சனி பகவான். தொழிலுக்கு காரகத்துவம் வகிப்பவர் சனி பகவான் தான். பத்தாம் பாவம் என்பது தொழிலுக்குரிய பொதுவான பாவம். அதைத் தவிர்த்து 12 பாவங்களிலும் தொழில் தொடர்பான நிலைகளை நாம் அறிந்திருக்க வேண்டும்.
ஜோதிடத்தில் இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்துதுறைத் தொழில்களையும் கூற முடியமா என்றால் முடியும். தொழிலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
அறிவின் மூலம் செய்யும் தொழில்கள், உடல் உழைப்பின் மூலம் செய்யும் தொழில்கள், பணத்தைக் கொண்டு செய்யும் தொழில்கள். எந்த ஒரு தொழிலும் இம்மூன்றிற்குள் அடங்கி விடும்.
ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கு இருந்த இடத்திலிருந்து புத்திசாலித்தனத்தால் செய்து முடித்தால் அது அறிவின் மூலம் செய்யப்பட்டதாக அர்த்தம். அதே செயலை ஓடி ஓடி உழைத்து செய்து முடித்தால் அது உழைப்பின் மூலமும், அறிவையும் உடலையும் பயன்படுத்தாமல் அடுத்தவர்களைப் பயன்படுத்தினால் அது பொருளின் மூலமும் செய்து முடிப்பதாக அர்த்தம். இதைத்தான் ஜோதிடம் விதி மதி கதி என்று கூறுகிறது. மதி என்னும் சந்திரன் மனதை ஆள்கிறது. கதி என்னும் சூரியன் உடலை ஆள்கிறது. விதி என்னும் இலக்கினம் தன்னை ஆள்கிறது. இம்மூன்றில் எது வலுவாக உள்ளதோ அதைச் சார்ந்த முறையில் தொழிலை அமைத்துக்கொண்டால் நாம் எளிதில் வெற்றி பெறலாம்.
ஒரே இடத்தில் இருந்து வேலைசெய்வோரும் உண்டு. ஊர்ஊராக சுற்றித்திரிந்து வேலைசெய்வோரும் உண்டு. இரண்டையும் சேர்த்து அதாவது சற்று தொலைவான இடத்தில் இருந்து வேலைசெய்வோரும் உண்டு. இவற்றைத் தான் ஜோதிடம் சரம், ஸ்திரம், உபயம் என்று பிரித்துக் காண்பிக்கிறது.
மேலும் 10ம் பாவத்தை முதன்மை பாவமாக வைத்து மற்ற 12 பாவங்களுக்கும் உள்ள தொடர்பைக் கொண்டு நம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நாம் உணர முடியும். 12 பாவங்களுக்கும் தொழில் தொடர்பான பகுதிகள்.
இலக்கிண பாவம் – நம்முடைய புகழ் நிலை, அனுபவிக்கும் நிலை,
2ம் பாவம் – வருமானம்
3ம் பாவம் – எதிரிகளை சமாளிக்கும் மனநிலை
4ம் பாவம் – சுக வாழ்வு
5ம் பாவம் – அதிர்ஷ்டம்
6ம் பாவம் – எதிரிகள்
7ம் பாவம் – கூட்டாளிகள் வேலையாட்கள்
8ம் பாவம் – நிலைத் தன்மை
9ம் பாவம் – பாக்கியம்
10ம் பாவம் – செய்யும் தொழில்
11ம் பாவம் – கிடைக்கும் இலாபம்
12ம் பாவம் – விரயம் அல்லது நட்டம்
உதாரணமாக கூட்டுத் தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு 7ம் பாவம் மற்றும் 4ம் பாவம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இலக்கிணத்திற்கு 7ம் பாவம் கூட்டாளிகளின் மனநிலை. கூட்டாளிகளிடமிருந்து நாம் பெறும் மகிழ்ச்சி இவற்றைக் குறிக்கும். மேலும் 10ம் பாவத்திற்கு 7ம்பாவமான நான்காம் பாவம் மூலம் கூட்டணி மூலம் நாம் அடையும் நன்மையையும் குறிக்கும்.
பத்தாம் பாவம் அமைந்த ராசி, ராசியின் அதிபதி, ராசியைப் பார்க்கும் கிரகங்கள், அதிபதியைப் பார்க்கும் கிரகங்கள் இப்படிப்பட்ட நிலைகளைக் கவனமாக ஆராய்ந்தால் எது நம் உடல் மற்றும் மனநிலைக்கு உகந்த வேலை அல்லது நம்முடைய தொழில் அல்லது வேலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற சூழ்நிலை புரிய வரும். சூழ்நிலையை உணர்ந்து செயல் பட்டால் நாம் தான் வெற்றியாளர்.
Friday, October 26, 2012
விதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.
வளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் இருக்கலாம் மன ரீதியாகவும் இருக்கலாம்.
பொதுவாக விதி என்பதை நம்மால் மாற்றமுடியாதது என்ற பொருளில் இதுவரை நாம் பயன்படுத்தி வருகிறோம். மதி என்பது நாம் சிந்திக்கும் மனம் என்ற பொருளிலும், கதி என்பது இறுதி வாழ்க்கை நிலை என்ற பொருளிலும் கையாளப்படுகிறது.
விதி என்பது நம்முன்ஜென்ம வினைகளின் பலன். மதி என்பது இப்பிறவி. கதி என்பது நாம் சென்றடையும் இடம். இந்த நிலையில் ஜோதிடம் இதனை எவ்வாறு எடுத்துக் கூறுகிறது என்பதனைப் பார்க்கலாம்.
விதி என்பது இலக்கினம். (ஜெனன ஜாதகம்) நாம் பிறந்த நேரத்தில் வான் மண்டலத்தில் சூரியன் உதிக்கும் ராசியே நமது இலக்கினம். இந்த சனப் பொழுதில் வான் மன்டலத்தில் உள்ள கிரகங்களை ஒரு ஒழுங்கு வடிவமைப்பில் எழுதும் போது கிடைப்பது தான் ஜாதகம். இவ்வுலகிற்கு நாம் கொண்டுவருவது தான் ஜாதகம். ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒருவகை காந்த சக்தி புவியை வந்தடைகிறது. அந்த காந்த சக்தியை முதலில் உணரும் அந்த நேரம் தான் நம்முடைய ஜனனமாகிறது. நவகோள்களில் இருந்து வரும் இந்த காந்த சக்தி நம்முடைய உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்தும் பாதிப்பு தான் நம்முடைய வாழ்க்கை முறை. இந்த முறையில் நமக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போக்கை காட்டக்கூடிய கண்ணாடி தான் ஜாதகம். அதற்கு முக்கியம் இலக்கினம். அதனால் அதனை விதி என்கிறோம்.
மதி என்பது நட்சத்திரங்கள் (திசா புத்தி அந்தரங்கள்). நாம் வசிக்கும் இப்புவியின் துணைக்கோள் சந்திரன். மிக மிக அருகில் இருக்கும் இந்தக் கோள் தான் நம்முடைய மனதை ஆள்கிறது. நாம் எவ்வாறு எண்ணுகிறோமோ அவ்வாறே நாம் வாழ்கிறோம் என்பது தான் உண்மை. அப்படி இப்பிறவியில் நாம் வாழும் நிலைதான் இந்த சந்திரன் என்படும் மதி. மனம் என்பது நிலையில்லாதது காரணம் சந்திரனிலிருந்து வரும் காந்த அலைகள் தினம் தினம் கூடுவதும் குறைவதுமாக இருப்பது தான். நாம் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் பயணிக்கிறதோ அது தான் நம்முடைய ஜனன நட்சத்திரம். இதன் மூலம் தான் திசா புத்தி அந்தரம் என்பது கணக்கிடப்பட்டு காலச் சக்கரத்தின் போக்கு வகைப்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தின் சாரம் வாங்கியுள்ளதோ அந்த நட்சத்திரஅதிபதிகளின் பிரதிபலிப்பு தான் ஜோதிடம் கூறும் பலன்கள்.
கதி என்பது கோச்சாரம். இன்றைய கிரக சூழ்நிலைகள். இன்றைய பொழுதில் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம்மிடம் பிறக்கும் போது வந்து சேர்ந்த காந்த அலைகளிடம் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கோச்சார பலன்கள். இப்படி நம்மைச் சேர்ந்த காந்த அலைகளின் போக்கு தான் நாம் இறுதியில் போய்ச் சேரும் இடம். இது தான் கதி என்பது.
பொதுவாக ஜோதிடத்தில் விதி, மதி, கதி என்பது எப்பொருளில் எடுத்துக் கொள்ளப்பட்டுவருகிறது என்றால்? விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம் சந்திரன் சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஜனன ஜாதகம், திசாபுத்தி அந்தரம், கோச்சாரம் இந்த நிலைதான் விதி மதி கதி என்பதாக எடுத்துக்கொண்டோமானால், ஜனன ஜாதகம் நடக்க இருக்கும் வினை என்ன என்று காட்டும். திசா புத்தி அந்தரங்கள் அந்த வினை எப்பொழுது என்று காட்டும். கோச்சாரம் அவ்வினையால் நாம் அடையும் திருப்தியைக் காட்டும்.
Wednesday, August 22, 2012
விதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.
ஜோதிட சூட்சுமங்கள்.
விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று கிடையாது.
ஆனால் அதை எவ்வாறு நாம் அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம் கூறும் சூட்சுமம். ஜோதிடத்தில் 12 பாவங்கள் ஆனால் அனைவருக்கும் 337 பரல்கள் (மதிப்பெண்கள்) தான். அப்படியிருக்க ஒரு பாவம் பலவீனமானால் கண்டிப்பாக மற்றொரு பாவம் பலமாகத்தான் இருக்கும் அப்படி இருக்கும் பாவ பலத்தை நாம் எப்படி நம் விதிகளுக்கு பயன் படுத்தப் போகிறோம் என்பது தான் இந்த சூட்சுமம். இது ஜோதிடத்தை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரிய வரும்.
உதாரணமாக
12ம் இடம் சம்பந்தப்பட்ட திசா புத்தி அந்தர சூட்சும காலங்களில் விரயம் நட்டம் செலவுகள் நடக்கும் என்பது ஜோதிட விதி. இந்த விதியை எப்படி மதியால் வெல்லலாம் என்று பார்ப்போம்.
செலவு என்பது என்ன? எதிர்காலத்திற்கு பயன்படாத ஆனால் நிகழ்காலத்தில் பயன்படக்கூடிய ஒன்று. விரயம் என்பது நம்மையறியாமலே நடக்கக்கூடிய செலவு. நட்டம் என்பது எதிர்பார்த்த அளவு பயன் கொடுக்காமல் இருப்பது.
மொத்தத்தில் கையில் உள்ள பணம் வெளியே போய்விடுவது.
- நீங்கள் செலவு செய்யாமல் சொத்தாக மாற்றி விடுவதன் மூலம் இந்த செலவு நாளைய சொத்தாக மாறிவிடும் அதற்கு உங்கள் ஜாதகத்தில் சொத்தது வாங்கும் யோகம் இருப்பின்.
- இல்லையென்றால். புண்ணிய காரியத்திற்கு செலவு செய்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு நல்ல திசா காலங்களில் பயன் படும்.
- தொழில் உள்ளவர்கள் விற்காத சரக்கை மிகக் குறைந்த விலைக்கு விற்பதன் மூலம் இலாபம் அடையலாம்.
பணம் மட்டுமே விரயம் என்பதில்லை. நோய்கள் விபத்துகள் வீண் அலைச்சலகள் மூலம் கூட நமக்கு 12ம் இடம் பாதிப்பைத் தரலாம். அதற்கு என்ன செய்வது.
1. வாகனங்களை முறையாக பராமரிப்பது. அதுவும் செலவுதான் விபத்தைத் தவிர்க்க உதவும்.
2. ரத்த தானம் செய்வது – ரத்தம் வெளியேறுவதற்குச் சமம் தான்.
3. அடிக்கடி மருத்துவமனைகள் சென்று நோயாளிகளுக்கு உதவுவது. உங்கள் பணம் நோய்க்கு செலவிடப்படுகிறது.
4. அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவம் எடுத்துக் கொள்வதற்குச் சமம் தான்.
மொத்தத்தில் நீங்கள் உங்களுக்கு விதிக்கப்பட்டதை அனுபவிக்கிறீர்கள் ஆனால் அது உங்கள் விருப்படி அமைகிறது. உங்களின் தேவைகளை நிறைவேற்றுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு தான் மதி. அந்த மதி உங்களின் விதியை மாற்றுகிறது எனக் கூறலாம். உண்மையில் உங்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் உணரும் போது அதற்கான விடைகளைத் தேடும் போது அது நடைபெறுகிறது.
இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நம்மிடம் உண்டு. ஆனால் நம் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் எது நல்ல கிரகம் எந்த செயலை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஆனால் எல்லாராலும் ஏன் இது சாத்தியப்படவில்லை. ஏன் ? அவர்களுக்கு மனோகாரகன் சரியில்லை அதாவது மதி வேலை செய்யவில்லை. அவர்கள் ஜோதிடத்தை உணரவில்லை என்பது தான்.
உணருங்கள் வெற்றி நிச்சயம்.
Tuesday, July 31, 2012
விதி என்பது ?
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…
Subscribe to:
Posts (Atom)