-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label கடன் தொல்லை ஏற்படும் காலம். Show all posts
Showing posts with label கடன் தொல்லை ஏற்படும் காலம். Show all posts

Wednesday, May 13, 2015

agathiyar-arudam-tamil-2-1-3

பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை இரண்டும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறை மூன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பாடல் 2-1-3

வாழநீ எத்தளித்தாய் வக்கரித்தானே கேது
தாழரெண்டொன்றும் மூன்றும் தடைப்பட வழுந்தபோது
சூழுமுன் குடும்பமின்று சுகங்கெட்டு சிதறிப்போகும்
கோழையாம் சில பேரால் குலக்கேடு வினையலாகுமே.


விளக்கம்
இரண்டும், ஒன்றும், மூன்றும் விழுந்தால் உனக்கு கேது வக்கரித்திருக்கிறான் என்று பொருளாகிறது. அதனால் சுகமான வாழ்க்கை இருக்காது. குடும்பம் சிதறி ஆளுக்கொரு இடமாக மாற்றி இருக்க வைக்கும். சில பேர்களால் உனது வம்சத்திற்கு அவமதிப்பைத் வந்து சேரும் என்கிறார்.

Wednesday, April 22, 2015

agathiyar-arudam-tamil-2-1-1


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை இரண்டும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறை ஒன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது


பாடல் 2-1-1

செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால்
பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது
மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார்
ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும்.

விளக்கம்
உனக்கு இரண்டும், ஒன்றும், ஒன்றும் உதயமானதால் அடிக்கடி பொருள் நஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும். மனைவி மக்களுடன் பிணக்கு உண்டாகும். எண்ணம் நிறைவேறாது எண்கிறார்.

Wednesday, February 18, 2015

agathiyar arudam tamil 1-2-1

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-2-1

விஷபாம்பை போலே பார்ப்பார் ஒன்றுரெண்டொன்று வீழ்ந்தால்
பசப்பு வார்த்தைகள் பேசிபறிப்பாருள் பொருளை எல்லாம்
நிஜமாக உரைத்திட்டாலும் நியாயமுணக்கிராது
கசங்கிட கடனில் தொல்லை காட்டிடும் கவலையாமே.


விளக்கம்

ஒன்று இரண்டு ஒன்று என விழுமானால் உன் சொந்தங்களும், நட்பும் உன்னை விஷப் பாம்பினை பார்ப்பது போல பார்ப்பார்கள்.நீ உண்மையை உரைத்தால் அது உறுதியாக இருக்காது. கடன்காரர்களின் தொல்லையும் காட்டும். கவலையும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.