-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label குழந்தை பாக்கியம்.. Show all posts
Showing posts with label குழந்தை பாக்கியம்.. Show all posts

Monday, August 31, 2015

குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா?

குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா?

இயற்கை என்றைக்கும் எதையும் யாருக்கும் மறுத்ததில்லை. மிக முக்கியமாக குழந்தைப் பேறு எனப்படும் சந்ததி விருத்தியை இயற்கை எந்த உயிரினத்திற்கும் மறுத்துப் படைத்ததில்லை. காரணம் உயிர்களின் பெறுக்கமே இயற்கையை வாழ வைக்கும். உயிர்கள் எதுவுமே இல்லையென்றால் யாருக்காக இயற்கை எதனை உருவாக்கப் போகிறது. இயற்கை தான் வாழ தன்னைச் சார்ந்துள்ள அனைத்தையும் வாழ வைத்துக் கொண்டே தான் இருக்கும். அதனால் சந்ததி விருத்தி என்பது இயற்கையானது. யாருக்கும் மறுக்கப்பட்டது அல்ல. பிறகு ஏன் குழந்தையின்மை என்ற நிலை ஏற்படுகிறது.

குழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் உண்டு. எந்த வயதில் என்பதில் வேண்டுமானால் சிறு வித்தியாசம் இருக்கலாம். மனப் பக்குவமும் உடற்பக்குவமும் இயற்கையோடு இணைந்திருந்தால் எந்த வயதில் வேண்டுமானாலும் குழந்தைப் பேற்றைப் பெற முடியும். ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையான நிலையை விட்டு செயற்கையான மன மற்றும் உடல் நிலைகளை பழக்கப்படுத்திக் கொள்கிறோம்.  உணவு மற்றும் உறக்கம் இந்த இரண்டும் சரியாக இருந்தால் பெரும்பாலான நோய்கள் தாக்காது என்று மருத்துவம் கூறுகிறது.

ஒரு சிலருக்கு பருவம் அடைந்து குறைந்த காலங்களிலே உயிரணுக்களின் வளர்ச்சி குறைந்து விடும். ஒரு சிலருக்கு பருவம் அடைந்து சிறிது காலம் கழித்தே உயிரணுக்களின் வளர்ச்சி முழுமை பெறும். உயிரணுக்களே எப்பொழுதும் இல்லை என்ற நிலை இருப்பதாகத் தெரியவில்லை. விதிவிலக்குகளை நாம் கணக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இதனால் தான் இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பருவத்திற்கு வந்து இரண்டு வருடங்களுக்குள் திருமணத்தை முடித்து வைத்துள்ளனர். இது தான் சரியானது.

ஒவ்வொரு உடலும் தனக்கு தேவையானதை எப்பொழுதும் உணர்த்திக் கொண்டு தான் இருக்கும். பசி, தாகம், வலி, உடல் வளர்ச்சி இது போன்று உடல் ஒவ்வொரு நிலையிலும் தனக்குத் தேவையானவற்றை உடல் உணர்த்திக் கொண்டுதான் வரும். நாம் தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பசித்த பின்பு புசி என்பது தான் இயற்கை. பிறந்த குழந்தையாக இருக்கும் போது கூட நாம் பசியை உணர்ந்து தான் அழுகிறோம். இதைப் போலத் தான் திருமணமும். ஆனால் இன்று நிலையை மாற்றி வைத்துள்ளோம். உடலைப் புரிந்து கொள்ளாமல் வெறும் வயது என்ற வருடங்களை வைத்தே நாம் திருமணங்களை நியாயப் படுத்துகிறோம்.

உடலும் மனமும் பலமா பலவீனமா என்பதை கிரகங்கள் உணர்த்தி விடுகின்றன. நாம் தான் உணர வேண்டும். குருவும் சுக்கிரனும் இரண்டு சுப கிரகங்கள்.  குழந்தைப் பாக்கியத்தை குறிக்கும் சுப கிரகம். சராசரியாக வருடத்திற்கு ஒரு ராசியில் அமர்ந்து பலன்களை உரைக்கின்றது.  ஆனால் மற்றொரு சுப கிரகமான சுககிரன் சராசரியாக மாதத்தற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி மாறிக் கொண்டே வருகிறது. சுக்கிரன் காதலுக்கும் காமத்திற்கும் அதிபதி.  4ம் பாவம் கட்டில் மோகத்திற்கான பாவம். 4ம் பாவத்திற்கு பலனாக 4க்கு 2ம் பாவமான 5ம் பாவம் குழந்தை பாக்கியம்.  உயிரணுக்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் காரகமாகிறார்கள். சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமோ கிரகயுத்தமோ ஆகும் போது உயிரணுக்களில் உற்பத்தியில் குறைபாடுகள் வரலாம்.  சுக்கிரன் சந்திரனுடன் சேர்ந்து ஒரே பாகையில் இருக்கும் போது உயிரணுக்களில் வீரியத்தில் குறைபாடுகள் வரலாம்.   ஆனாலும் முறையான சிகிச்சையினால் முழுப் பலனைப் பெறமுடியும். இது இயற்கையின் வழி.

அனைத்தும் சரியாக இருந்தும் குழநதை பிறக்க வில்லையென்றால் மனத்திற்குத் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். உடலுக்கு அல்ல. மனதின் எண்ணங்கள் வெளிப்படுத்துவதைத் தான் உடல்கள் பிரதி பலிக்கின்றன. உடல்கள் உணர்த்துவதைத் தான் செயல்கள் பிரதிபலிக்கின்றன. சுக்கிரனும் செவ்வாயும் பலமாக இருந்தால் நிச்சயம் சந்ததி உண்டு. சுமாரான பலத்துடன் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகவாது கிடைத்துவிடும். இரண்டு கிரகங்களும் 6, 8, 12 ஆக அமைந்து அல்லது நீசம் பெற்று பகை பெற்று இருந்தாலும் குரு, இலக்கிணம், 5ம் பாவாதிபதி இவர்களில் யாராவது ஒருவர் பலமாகிஇருந்தால் கூட மருத்துவத்திற்கு பிறகு பாக்கியம் உண்டு. இதையும் தாண்டி, 99.9999 சதவீதம் வாய்ப்பில்லாத நிலையில் சூரியன், ஒன்பதாம் பாவம் 5ம் பாவம், 3ம் பாவம் சரியாக அமைந்த குழந்தையை தத்து எடுத்து உடன் வளர்த்து வர வாய்ப்புகள் பிரகாசமாகும். சூரியன் சுக்கிரன் தாக்கத்திற்கு உடலிற்கும், சந்திரன் சுக்கிரன் தாக்கத்திற்கு மனதிற்கும் இயற்கை வைத்தியமளித்தால் மிக விரைவில் தகுதியுள்ள அனைவரும் பெற்றோராகிவிடலாம்.

நன்றி.

Sunday, August 9, 2015

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். 2-1-6

agathiyar arudam tamil 2-1-6


அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


மிகவும் அதிர்ஷ்டமான நேரம். உங்களின் எண்ணங்கள் முன்னேற்றமாக இருந்தால் இந்த நேரம் அதைத் தொடர முயற்சி எடுங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு.

பாடல்
விளையாது வெகுவாய் துன்பமிரண்டு ஒன்றாறுமானால்
பழையநாள் வழக்கும் வெல்லும் பாவையும் கெர்பமாவாள்
தழைத்துமே குடும்பமோங்கும் தட்டாது உந்தன்வாக்கு
துலைந்திடும் கெண்டம் நோயும் துணையது உண்டு தெய்வம்.

பாடல் விளக்கம்.

இரண்டும், ஒன்றும், ஆறும் அடுத்தடுத்து விழுமானால் அதிர்ஷ்டவசமான லாபமெல்லாம் கிடைக்கும். முன்னோர்களின் குடும்பவழக்குகளின் சிக்கலொழியும்.  மனையாளுக்கு கெர்ப்பம் தரிக்கும். தழைத்த குடும்பம் செழித்து ஓங்கும். உன் வார்த்தைக் கெதிர்வார்த்தை யிராது, கெண்டமும் நோயும் நீங்கும், தெய்வம் துணையுண்டு என்கிறார் அகத்தியர்.

Friday, October 18, 2013

அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு – விதியை மதி வென்றுவிடுமா?

குழந்தை பிறக்கும் நேரத்தை நிர்ணயிப்பது யார்?

குழந்தை தான்.

நம்முடைய முன்வினைப் பயன்படி தான் இப்பிறவியில் நாம் பிறக்கிறோம். தாயும் தந்தையும் கருவிகள் தான். அவர்கள் நிர்ணயிப்பதில்லை. இன்றைய காலகட்டத்தில் அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப் பிறப்பு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் குழந்தையின் பிறந்த நேரத்தை முன்கூட்டியே நிர்ணயம் செய்து நல்ல நேரம் காலம் பார்த்து குழந்தையை பெற்றெடுக்கின்றனர். இதன் மூலம் குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துவிட முடியும் என்று எண்ணித்தான் பெற்றோரும் செயல்படுகின்றனர். அவர்களின் எண்ணங்கள் மேலானது தான். ஆனால் அது உண்மையில்லை.

கருவானது தாயின் கருவறையில் நல்ல முறையில் வளர்ந்து போதிய கால இடைவெளியில் தானாகவே தன்னை வெளிப்படுத்துக்கொள்ளும். அப்படி இயலாத நிலையில் தாயின் உடல்நிலையையும் குழந்தையின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு அறுவைச்சிகிச்சையின் மூலம் குழந்தைப்பிறப்பு நிகழ்கிறது. இதில் தவறில்லை. இதனால் குழந்தையின் விதி நிர்ணயிக்கப்படுகிறதா என்றால் இல்லை. குழந்தை பிறப்பு என்பது ஒரு உயிரின் பிறப்பு ஒரு ஆன்மாவின் அவதாரம். இதை வேறு யாரும் நிர்ணயிக்க முடியாது.

விதியின் விளைவாகவே கரு உருவாகிறது. விதியின் படிதான் வளர்கிறது, வெளிவருகிறது. இந்தக் குடும்பத்தில் இவர்களுக்கு பிள்ளையாகப் பிறந்து இப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்ற சூழ்நிலை உருவாவது குழந்தைபிறப்பின் போது மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. ஏற்கனவே இறுதிசெய்யப்பட்ட நிகழ்வு. புகழ் பெற்ற மனிதருக்கு பிறந்த குழந்தைகள் வெளி உலகிற்கு தெரியாமல் போவதுண்டு. வெளி உலகத்திற்கு தெரியாமல் உள்ள பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் புகழ் பெற்று வாழ்ந்ததும் உண்டு. இது அவர்கள் பிறந்த நேரம் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. உண்மை தான். ஆனால் அந்த நேரம் யாரும் நிர்ணயித்தது இல்லை.

குழந்தை எந்த நேரத்தில் பிறந்தாலும் அது உண்மையில் நல்ல நேரம் தான். இராகு காலம், அம்மாவாசை, ஆயில்யம் நட்சத்திரம் இது போன்ற காலங்களில் குழந்தை பிறந்தால் அது குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்ற கருத்து முற்றிலும் தவறானது. எல்லா காலமும் நல்ல காலம் தான். வெயில், மழை, காற்று, பனி இப்படி எல்லா காலநிலைகளும் தேவைதான். எந்தக் காலத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் எல்லா காலநிலைகளும் நல்லது தான். அது போலத்தான் ஜோதிடமும். ஒவ்வொரு திசா புத்தி அந்தர காலங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தால் வாழ்க்கை என்றென்றும் திருப்தியாக இருக்கும்.

நன்றி.

Tuesday, June 25, 2013

ஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்

ஜோதிடத்தில் தீர்வு - புத்திர தோசம் – விளக்கமும் விடையும்

ஜோதிடம் ஒரு மாற்று மருத்துவம். வருமுன் காக்கும் வைத்திய சாலை தான் ஜோதிடம். எந்த ஒரு பிரச்சனைக்கும் மூலம் என்று ஒன்று இருக்கும். விடை என்ற ஒன்றும் இருக்கும். பிரச்சனைக்குரிய காரணங்களைத் தெரிந்து கொண்டால் அதற்குரிய தீர்வையும் எளிதாக தேடிவிடலாம்.

மருத்துவ வளர்ச்சி அதிகரித்துவிட்ட போதும் இன்னும் குழந்தையின்மை என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு ஆண் மட்டுமோ அல்லது பெண் மட்டுமோ காரணம் அல்ல. கிரக சூழ்நிலைகளும் மன நிலைகளும் காரணமாக அமைகிறது. குழந்தை என்பது என்ன நம்முடைய மரபு வழி சந்தததி. நமது பாரம்பரிய வாரிசு. இதைத் தான் பூர்வ புண்ணியம் என்று ஜோதிடம் கூறுகிறது.

ஐந்தாம் பாவம் (ஸ்தானம்) தான் குழந்தையைக் குறிக்கும் ஸ்தானம். ஐந்தாம் பாவம் பாதிக்கப்பட்டிருப்பின் பிள்ளைகளால் மனவருத்தம் உண்டாகும் என்பது தான் உண்மை. அது பிள்ளைகள் இல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் தொல்லைகள் வரலாம். இது இயற்கை நியதி. பிள்ளைகளால் வரும் தொல்லைகளை மற்றுமொரு கட்டுரையில் காணலாம். இப்பொழுது குழந்தைப் பாக்கியம் கிடைக்க என்ன வழி என்பதை மட்டும் ஆராயலாம்.

திருமணத்திற்கு பின்பு தான் நாம் குழந்தைபிறப்பைப் பற்றி சிந்திக்கிறோம். அது தவறு. திருமண வயது நெருங்கும் போதோ அல்லது திருமணத்திற்கு தயாராகும் போதோ நம்முடைய ஜாதகத்தை ஆராய்ந்து தெளிதல் வேண்டும். முக்கியமாக குழந்தைபாக்கியமான ஐந்தாம் பாவத்தை ஆராய்ந்து அதில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்ய வேண்டும். உடல் ரீதியாக குழந்தைப் பேற்றிற்காக நம் உடலையும் மனதையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் ஐந்தாம் பாவத்திற்கு மூன்றாம் பாவமாக விளங்குவது ஏழாம் பாவம். அதாவது குழந்தை தொடர்பான (5ம் பாவம்) வீரியத்திற்கு (3ம் பாவம்) களத்திரமும் (ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும்) பொருப்பேற்க வேண்டும். ஒருவருக்கொருவர் குறைசொல்லக்கூடாது. வெறும் நட்சத்திர திருமணப்பொருத்தம் மட்டுமே பார்த்துவிட்டு திருமணங்கள் நடத்தக்கூடாது. முழு ஜாதகமும் முறைப்படி ஆராயப்பட வேண்டும்.

ஐந்தாம் பாவம் மட்டுமல்ல. நான்காம் பாவமும் குழந்தைபிறப்போடு தொடர்புடையது தான். ஐந்தாம் பாவத்திற்கு அயன சயன மோட்ச பாவமான நான்காம் பாவம்  (காமத் திரிகோணம்) நன்கு இருந்தால் தான் தாம்பத்தியம் திருப்திகரமான முறையில் நிகழும்.

ஐந்தாம் பாவம் பாதிப்பிற்குள்ளானவர்கள் முடிந்தவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். குழந்தைப் பிறப்பை தள்ளிப்போடக்கூடாது. இவர்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டம்.

கூடும் நாட்கள் கூடா நாட்கள் என்று நாட்களை வகைப்படுத்தியுள்ளார்கள். அந்தந்த நாட்களை கவனத்தில் வைத்து அன்றைய தினம் மனத்தையும் உடலையும் திருப்தியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.  மேலும் தாரா பலம், சந்திர பலம் உள்ள நாட்கள் மிகுந்த நன்மையைத் தரும். அம்மாவசை பவுர்ணமி நாட்களை விலக்குதல் நலம் தரும்.

இருவரும் சேர்ந்திருந்து ஐந்தாம் பாவமும் நன்றாக இருந்தால் குழந்தைபாக்கியம் கிட்டாத நிலை கண்டிப்பாக இருக்காது.

திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளும் ஜோதிடத் தீர்வுகளும்