-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, December 22, 2012

பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?

பிறந்த நாள் ஏன்? எப்படி? என்று? கொண்டாடப்பட வேண்டும்.?

நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் அதனால் இந்த புவியில் மனிதப் பிறவியாய் பிறந்திருக்கின்றோம். நாம் எவ்வளவோ பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவற்றை மாற்றக்கூடிய வல்லமையோடு இந்த பிறவியில் பிறந்திருக்கிறோம் அப்படிப் பிறந்த நாளை நாம் கண்டிப்பாக கொண்டாடியாகவேண்டும். நம்முடைய பிறந்தநாளில் நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களும் ஆசிகளும் அந்த வருடம் முழுவதும் நிறைந்து கிடைக்கும் என்பது உறுதி.

பிறந்தநாளில் கேக் வெட்டி, மெழுகுவர்த்தி அணைத்து கொண்டாடுவது சரியா?

தவறு.

இந்நாளில் பெரும்பாலான அனைவரும் இந்த முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இது தவறான முறையாகும். பிறந்த நாள் என்பது நாம் இந்த புவியில் அவதரித்த நாள். அந்நாளில் தான் இந்த உலகத்தின் மின்காந்த அலைகளை நாம் முழுவதுமாக தன்னிச்சையாக சுவாசிக்த் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் துவக்கமாகத் தான் இந்த நாள் அமையவேண்டுமே தவிர, எதையும் அணைக்கவோ வெட்டவோ கூடாது.

பிறந்தநாள் என்பது ஆங்கில தேதியா? தமிழ் தேதியா?.

இரண்டும் இல்லை. பிறந்த தமிழ்மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் தான் பிறந்த நாள்.

நாம் பிறந்த தமிழ்மாதத்தில் நாம் பிறந்த நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் நம்முடைய பிறந்த நாள். ஒரே மாதத்தில் இரண்டு முறை வருமானால் சுக்ல பட்சம் அமர பட்சம் அதாவது வளர்பிறை தேய்பிறை பார்த்து நாம் பிறந்த திதியை அனுசரித்து பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.


பிறந்தநாளில் செய்யய்கூடியதும் செய்யக்கூடாததும்.

செய்யக்கூடியது. – ஆலயங்களுக்குச் செல்வது – புதுப் பொருட்கள் வாங்குவது – தான தர்மங்கள் செய்வது – பெற்றோர் மற்றும் நல்லோரிடம் ஆசி பெறுவது – நன்றி கூறுவது

செய்யக்கூடாதது – மருந்து உண்பது – தலை முழுக்கு – அசைவம் சாப்பிடுவது – அமங்கலச்சொற்கள் கூறுவது – சாபமோ கொடுஞ்சொற்களோ பெறுவது  


1 comment:

  1. 10 ரிஷிகள் – 1.அத்திரி மகரிஷி
    http://www.tamilkadal.com/?p=1875
    உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில் அத்திரியும் ஒருவர். சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரர் இவர். இவருடைய மனைவி அனுசூயா. பதிவிரதையான அனுசூயாவால் அத்திரி முனிவருக்கும், அத்திரி முனிவரால் அனுசூயாவுக்கும் பெருமை. தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. வேத புராண இதிகாசங்கள் எல்லாவற்றிலும் இத்தம்பதிகள் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர்.

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி