-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label உறவினர்கள் பகையாகும் நிலை. Show all posts
Showing posts with label உறவினர்கள் பகையாகும் நிலை. Show all posts

Thursday, February 26, 2015

agathiyar-arudam-tamil-1-2-3

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை இரண்டும் மூன்றாம் முறையும் மூன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-2-3

பாடல்


சகாயத்தால் அபாயம் நேரும் சரியொன்றுமிரண்டும் மூன்றும்
விகாரமாய் தோன்றுவாய் நீ விண்பெய ரெடுக்கலாகும்
அகாலமாய் மரணசேதி அப்பனே கேட்பாய் நீயும்
சுகரசுக மிழந்தபோதும் தைரியந்தனை விடாதே.

விளக்கம்

ஒன்றும், இரண்டும், மூன்றும் விழுந்தால் உன் கிரகக் கோளாறினால் உன் முகமே விகாரமாகத் தோன்றும். பெயரும் புகழும் கெடும். பிறறுக்கு உதவினாலும் அதனால் அபாயமுண்டாகும். உறவினர்களுக்குள் திடீரென மரணச்சேதியும் கேட்பாய். மேலும் உனது சுகம் முற்றும் இழந்தாலும் உனது தைரியத்தை மட்டும் விடாதே என்கிறார்.