-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label ஜோதிடக் கல்வி. Show all posts
Showing posts with label ஜோதிடக் கல்வி. Show all posts

Wednesday, January 16, 2013

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

ஜோதிட ஆராய்ச்சி - பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.

மனித வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் அனைத்துச் செயல்களையும் 12 பாவங்களாகப் பிரித்துவிடமுடியும். அந்த 12 பாவங்களின் நாயகர்களாக 9 கோள்களை நியமித்துவிட முடியும் இது தான் ஜோதிடத்தின் கரு.

ஜனனத்திற்கு முந்தைய நிலையிலிருந்து மரணத்திற்கு பிந்தைய நிலைவரை ஜோதிடத்தில் கூறமுடியும். அப்படிக் கூறுவதற்கு உண்மையான பக்தி இருக்க வேண்டும். பக்தி என்பது இறைவனிடம் மட்டும் தான் என்பதில்லை. தன்னைத் தான் உணர்தலே இறைவனை அடைவதற்குச் சமம். சாமானிய மக்கள் தான் இறைவனைத் தேடி ஓடுகின்றனர். தன்னை உணர்ந்தவனிடம் இறைவன் தானே வந்து சேர்கிறான்.

அப்படி இறையருளையும் தன்னகத்தே கொண்ட ஞானிகளால் உணரப்பட்டதே ஜோதிடம். அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவர் தான் பிருகு முனிவர். அவர் தனது திவ்ய திருஷ்டியால் உருவாக்கி அருளியதே இந்த ஜோதிட முறை. அவற்றை எளிமைப் படுத்தி ஜோதிட ஆர்வலர்கள் பலரும் எழுதி வைத்துள்ளனர்.

சப்தரிஷி ஜோதிட ஆராய்ச்சி மையம் ஆங்கிலத்தில் எழுதிய கருத்துக்களை எடுத்து தமிழில் கொடுத்துள்ளேன். விதிகள் மட்டுமே மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம் அது பொதுவானது. ஆனால் அதன் மீதான ஆராய்ச்சியை தனித்தனியாகத்தான் மேற்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் விடைகள் மீதான தெளிவு பிறக்கும்.
கருத்துக்களை மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். காரணம் எடுத்துக்காட்டு ஜாதகங்கள் அதன் விளைவுகள் எல்லாம் மிகச் சிறிய அளவிலானது தான். அனைவரும் பங்கெடுத்து ஆராய்ந்தால் மிகத் துல்லிய பலன்களைக் கூற முடியும்.
பிருகு சரல் பத்ததியின் மூலம் எந்தெந்த வயதில் எந்தெந்த கிரகங்களின் தாக்கங்களினால் என்ன நடக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சில.


விதி – 6
ஜெனன ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருக்கிறாரோ அவரிடமிருந்து எண்ண வரும் 10ம் பாவ பலன்களில் ஒன்று ஜாதரின் 27ம் வயதில் நடைபெறும்.

விதி 8– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 6ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 38ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 9– கேது பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 12ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 24ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 10-குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 40ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 11-குரு பகவான் தனது 5ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றையோ அல்லது 5ம் பாவத்திற்கு 3ம் பாவமான 7ம் பாவத்தின் பலன்களில் ஒன்றையோ ஜாதகரின் 32ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 12–சனி பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 3ம் பாவ பலன்களின் ஒன்றை ஜாதகரது 20ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 17– இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்தோ அல்லது தான் இருக்கும் இடத்திலிருந்து 9ம் பாவ பலன்களின் ஒன்றையோ ஜாதகரது 37ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 18– குரு பகவான் தான் இருக்கும் இடத்தின் பலன்களின் ஒன்றை ஜாதகரது 69ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 19-குரு பகவான் தனது 9ம் பார்வையின் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

விதி 21-இராகு பகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5ம் பாவ பலன்களில் ஒன்றை ஜாதகரின் 22ம் வயதில் நடத்தி வைப்பார்.

இந்த விதிகளின் மீதான ஆராய்ச்சியை இனி தொடரலாம்.

Saturday, November 17, 2012

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

பட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா?

ஆம்.

எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்பதும் கூட ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். ஜோதிடம் என்பது வார்த்தையால் விவரிக்கக் கூடிய சாதரண தொகுப்பு அல்ல. வானியலில் துவங்கி மறுபிறவி வரை அனைத்தையும் உள்ளடக்கியது. எந்த ஒரு நிகழ்வும் தூண்டுதலின் பெயரிலேயே நடக்கிறது. எதிர்கால வாழ்க்கை என்பது தான் உண்மை. கடந்த காலம் நாம் அனுபவித்துவிட்டது அதை மாற்ற முடியாது. நிகழ்காலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. எல்லாம் எதிர்காலம் தான். அப்படிப்பட்ட எதிர்காலத்தை உணர போதிக்கும் ஒரே கல்வி ஜோதிடக் கல்வி தான். அந்த ஜோதிடக் கல்வியை முறைப்படுத்தி கற்றவர்கள் தான் ஜோதிடர்களாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வேண்டியதில்லை. பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் என்பதால் அதற்கு கல்வித் தகுதி என்பது தேவையில்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இறையருளால் அருள் வாக்கினால் கூறப்படுவதற்கு கல்வி எதற்கு என்ற கேள்வியும் அர்த்தமற்றது. காரணம் கல்வி முறைப்படுத்தப் படும் போது தான் ஒரு ஒழுங்கு நிலைக்கு வரமுடியும். அனைவருக்கும் அனைத்தும் பொதுவாக முடியும்.

ஜோதிடம் என்பது 12 ராசிகள் 9 கோள்கள் 27 நட்சத்திரங்கள் 108 பாதங்கள், 360டிகிரி பாகை, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான காலச்சக்கரங்கள் இப்படி எண்ணற்ற தொடர்புகள் கொண்டது ஜோதிடம். ஜோதிடக் கணிதம் என்பது காலக் கணிதம்.  அனைத்துக் காலத்திற்கும் பொதுவானது. ஜோதிடம் என்பது தனியானது அல்ல. வானியல், முகூர்த்தம், தாஜிகம், பிரசன்னம், ஜாதகம், திசாபுத்தி, கோச்சாரம், மேதினி ஜோதிடம்,இரத்தினவியல்,  இது போன்று இன்னும் நிறைய பெரும் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பெரும் பிரிவுக்குள்ளும் சின்ன பிரிவுகள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல, பங்குவர்த்தகத்தில் ஜோதிடம், மருத்துவத்தில் ஜோதிடம், உளவியல், ஆன்மீகம், இப்படி அனைத்துத் துறைகளிலும் எதிர்காலத்தை உணர்த்தவல்ல ஜோதிடம் முறையாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். அனைவரும் அனைத்து துறையிலும் புலமை பெற முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். ஜோதிடத்தின் அனைத்து பிரிவுகளின் சிறு அடிப்படையையாவது தெரிந்து பின்னர் தான் ஜோதிடராக வரவேண்டும். என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் அப்பொழுது தான் ஆராய்ச்சி பெருகும். தேடுதல்களும் தேவைகளும் அதிகரிக்கும். ஜோதிடத்தை முழு நேரத் தொழிலாக வைத்துள்ளவர்களுக்கும் நியாயமான வருமானமும் புகழும் கிடைக்கும். அடிப்படை ஜோதிடக் கல்வி கற்றவர்கள் மட்டுமே ஜோதிடர்கள் என்ற நிலைவருமாயின் தகுதியற்றவர்களிடம் மக்கள் ஏமாறும் நிலை மாற்றப்படும்.

இன்று ஜோதிடத்தை நேரடியாவும் தொலைநிலைக் கல்வி வாயிலாகவும் கற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஜோதிடக் கல்வியை அரசும் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாய பாடமாக்க வேண்டும். ஜோதிடத்திற்கு என்று தனியாக பல்கலைக்கழகம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஜோதிட ஆராய்ச்சிக்கு அரசு உதவ முன்வர வேண்டும். அப்பொழுது தான் ஜோதிடத்தின் உண்மைத் தன்மையை மக்கள் உணர்ந்து பயன் பெற முடியும்.

Thursday, September 20, 2012

ஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா?

ஜாதகம் – Horoscopes
இலக்கிணம் - Lagna – ascendant
உபகிரகம் - sub-planets or satellites
பாவம் – House
வர்க்க்ச் சக்கரம் - Divisional Charts
இராசி – Rasi
இராசி சக்கரம் – Rasi Chart
நவாம்சம் – Navamsam -

ஒற்றைப்படை இராசி – ஓஜ ராசி – ODD Rasi
இரட்டைப்படை இராசி -  யுக்ம ராசி  - Even Rasi

சர ராசி  - Movable Rasi
ஸ்திர ராசி  - Fixed Rasi
உபய ராசி  - Dual Rasi

நெறுப்பு ராசி – Fiery Rasi
நில ராசி – Earthy Rasi
காற்று ராசி – airy Rasi
நீர் ராசி – watery Rasi

சுப கிரகம் - Benefics
இயற்கை சுப கிரகம் – Natural Benefics
அசுப கிரகம் – Malefics
இயற்கை அசுப கிரகம் – Natural Malefics

ஆண் கிரகம் – Male Planets
பெண் கிரகம் – Female Planets

உச்சம் - Exalted
உச்ச ராசி - exaltation rasi
நீசம் – debilitated
நீச ராசி – debilitation rasi
மூலத்திரிகோணம் – moolatrikona
சொந்த வீடு - Own House

நட்பு – Friends
சமம் – Nuetral
பகை – Enemies
தற்காலிக நட்பு பகை – Temporary Relationship
இயற்கை நட்பு பகை – Natural Relationship

உபகிரகம் - Sub-Planets – Upagrahas – satellites

பார்வை - Aspect
சேர்க்கை – Conjunctions
பலம் – Strength
பாவாதிபதி – Lord of the House
பாவத்தின் பலம் - Strenght of the House
கேந்திரம் – Angles (Kendram) – Quadrant
கேந்திராதிபதி - Angular Lord
திரிகோணம் – Trine –
திரிகோணாதிபதி - Trinal Lord
பரிவர்த்தனை – Exchange
சேர்க்கை - conjoined
வருட ஜாதகம் – தாஜிகம் - Tajaka annual chart,
காரகர் - significator

Monday, August 27, 2012

ஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா?

ஜோதிடச் சொற்களை ஆங்கிலத்தில் கற்றுக் கொள்வோமா?

மொழி என்பது நம்முடைய எண்ணங்களை அடுத்தவர்களுக்கு உணர்த்துவது. அதாவது யாருக்கு நம்முடைய எண்ணங்கள் சென்றடைய வேண்டுமோ அவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் உணர்த்துவது. அனைவருக்கும் அவர்அவர்கள் தாய்மொழி சிறந்தது தான். அவர்அவர்கள் தாய் மொழியில் கற்பது தான் சிறந்தது. ஆனாலும் மற்ற மொழியறிவு இருந்தால் தான் அனைத்து  தரப்பட்ட மக்களின் எண்ணங்களையும் அறிந்து அவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை நாம் பெறவும் நம்முடைய நல்ல பழக்கவழக்கங்களை அடுத்தவர்கள் அறியதரவும் முடியும்.

மொழிகளைக் கடந்த வேதம் தான் ஜோதிடம். அனைத்து மதங்களிலும் வேத ஜோதிடத்தின் தாக்கம் உள்ளது. வேதங்களின் தூணான ஜோதிட வேதத்தின் ஆராய்ச்சி அவ்வப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பதை எடுத்து அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற நல்எண்ணத்தோடு உழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பி.வி.ராமன். கிருஷ்ணமூர்த்தி, இது போன்ற பலரும் தத்தம் ஆராய்ச்சிகளை விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி வைத்துள்ளனர். அவற்றில் ஒரு சில தான் தமிழ் மொழி வாயிலாக கிடைக்கப் பெறுகின்றன. மேலும் மற்ற நாடுகளிலும் வேத ஜோதிடத்தின் ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மொழி பெரும்பாலும் ஆங்கிலமாகவே இருக்கிறது.

வேதமொழி நம்முடையது தான் என்றாலும் ஆராய்ச்சி கட்டுரைகள் பல ஆங்கிலத்தில் இருப்பதால் அவற்றையும் கற்றுணர்ந்தால் தான் உண்மை நிலையை அறிய முடியும். அதனால் ஆங்கில மொழியில் ஜோதிடத்தை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.

முதலில் ஜோதிடச் சொற்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை காண்போம்.

கோள்கள் – (Planets)

சூரியன் –  Sun
சந்திரன் - Moon
செவ்வாய் - Mars
புதன் - Mercury
வியாழன் (குரு) – Jupiter
சுக்கிரன் - Venus
சனி - Saturn
இராகு – Rahu – North Node – Head of Dargon
கேது – Ketu – South Node – Tail of Dargon


இராசி – (Sign)

மேஷம் - Aries (Ar)
ரிசபம் - Taurus (Ta)
மிதுனம் - Gemini (Ge)
கடகம் - Cancer (Cn)
சிம்மம் - Leo (Le)
கன்னி - Virgo (Vi)
துலாம் - Libra (Li)
விருச்சிகம் - Scorpio (Sc)
தனுசு - Sagittarius (Sg)
மகரம் - Capricorn (Cp)
கும்பம் - Aquarius (Aq)
மீனம் - Pisces (Pi)



நட்சத்திரம் – (Star)
அஷ்வினி - Aswini
பரணி - Bharani
கார்த்திகை - Krittika
ரோகிணி - Rohini
மிருகசீரிடம் - Mrigasira
திருவாதிரை - Aardra
புணர்பூசம் - Punarvasu
பூசம் -  Pushyami
ஆயில்யம் - Aasresha
மகம் - Makha
பூரம் - Poorva Phalguni
உத்திரம் - Uttara Phalguni
அஸ்தம் - Hasta
சித்திரை - Chitra
சுவாதி - Swaati
விசாகம் - Visaakha
அனுசம் - Anooraadha
கேட்டை - Jyeshtha
மூலம் - Moola
பூராடம் - Poorvaashaadha
உத்திராடம் - Uttaraashaadha
திருவோணம் - Sravanam
அவிட்டம் - Dhanishtha
சதயம் - Satabhishak
பூரட்டாதி - Poorvaabhaadra
உத்திரட்டாதி - Uttaraabhaadra
ரேவதி – Revati

தொடரும் (Continue)