-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label தரித்திர யோகம். Show all posts
Showing posts with label தரித்திர யோகம். Show all posts

Friday, February 20, 2015

வறுமையை வெல்ல ஜோதிட சூட்சுமங்கள்.

வாழ்க்கையில் வறுமையைக் குறிக்கும் கிரக சூழ்நிலைகள்.

வறுமை என்பது இல்லாதது, இயலாதது. இந்த இரண்டின் நிலையைத்தான் வறுமை என்கிறோம். உண்பதற்கு சரியான ருசியான உணவில்லை என்பதும், சரியான ருசியான உணவிருந்தும் சாப்பிட முடியாது என்பதற்கும் விளைவு ஒன்று தான். சாப்பாடு கிடையாது என்பது தான.

வறுமை என்பது பணம் இல்லாதது மட்டுமல்ல. பணத்தையும் தாண்டி, நியாயமாக கிடைக்க வேண்டிய எதுவெல்லாம் கிடைக்க வில்லையோ அதில்எல்லாம் நாம் வறுமையாக இருக்கிறோம் என்று பொருள். அதிகப்படியான நோய், நியாமான வருமானமின்மை, அடுத்தவர்களையே எப்பொழுதும் நம்பியிருத்தல் இப்படி எல்லாமே வறுமையின் அடையாளங்கள் தான்

இருந்தும் அனுபவிக்க முடியாதவனுக்கும் இல்லாமல் அனுபவிக்காமல் இருப்பவனுக்கும் ஜாதகத்தில் என்ன வித்தியாசம் இரு்க்கும்? புண்ணிய ஸ்தானமும் பாக்கியஸ்தானமும் நன்றாக இருந்தால் அவனால் அனுபவிக்க முடியும். இந்த இரண்டு பாவங்களும் கெட்டுப் போயிருந்து மற்ற பாவங்களின் மூலம் அவன் செல்வந்தராயிருந்தாலும் அவனால் அதனை அனுபவிக்க முடியாது.

இயலாதவர் மற்றும் இல்லாதவருடைய கிரக சூழ்நிலைகள் எப்படி இருக்கும். ?இராசிச் சக்கரத்தின் இலக்கிணாதிபதி, நவாம்சத்தில் இருக்கும் இடத்தின் அதிபதி இராசியில் இலக்கிணத்திற்கு 2, 7, 6, 8, 12 ம் இடங்களில் இருந்தால் வருமை ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது..

இரண்டாம் இடத்தில் இருந்தால்

இரண்டாம் பாவ பலன்களான தனம் வாக்கு குடும்பம் இவற்றை இழந்தோ அல்லது மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாத சூழல் உருவாகும்.

7ம் இடம், மனைவி, நண்பர்கள், இவர்களால் தொடர்ச்சியாக தொல்லைகள் ஏற்படும்.

6ம் இடம் இடைவிடாத நோயினாலும், வழக்கு, சண்டைகளாலும் அதிகப்படியான கடனாலும் நிம்மதியை இழக்க நேரிடும்.

எட்டாம் இடம், தொடர் விபத்து, ஆசைகள் இருந்தும் உடலோ மனமோ உடன் படாமல் வாழ்க்கையில் வெறுமையை உணர்தல்.

பன்னிரெண்டாம் இடம், எதை எடுத்தாலும் தோல்வி, நிம்மதியான உறக்கமின்மையால் அவதி போன்றவை ஏற்படும.

இதற்குத் தீர்வு என்ன?

வறுமை என்பது நிரந்தரமல்ல. யோகமான திசா புத்தி காலங்களில் கிடைக்கும் நல்ல சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொள்வது தான் வறுமையை ஒழிக்க ஒரே தீர்வு. அனைவருக்கும் யோக சூழ்நிலைகள் நிச்சயம் அமையும் அப்பொழுது பிரச்சனைகளுக்குரிய தீர்வுகள் கிடைக்கும் அல்லது பிரச்சனைகள் வரும் முன் காக்கக்கூடிய வழிமுறைகள் உருவாகும். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும்.



நன்றி.

Tuesday, November 27, 2012

தரித்திர யோகம் என்ன பலனைத் தரும்? பரிகாரங்கள் என்ன?


ஜோதிடத்தின் முன் அனைவரும் சமமே. யோகங்கள் என்பது நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அல்லது அனுபவிக்க இருக்கும் வாழ்க்கை முறையை சுருங்கக் கூறுவது தான்.  யோகங்கள் என்பதும் தோசங்கள் என்பதும் ஒன்றுதான். ஒருவருக்கு ஏற்புடைய கருத்து மற்றவருக்கு மாற்றுக் கருத்தாக அமையலாம் அது அவர்களின் பார்வையே அன்றி, கருத்தின் குற்றமல்ல. அதே போலத்தான் ஜோதிடத்திலும் யோகங்களுக்கும் தோசங்களுக்கும் சமநிலை தான்.

தரித்திரம் என்றால் என்ன? இல்லாமை மற்றும் இயலாமை இந்த இரண்டும் இருக்கும் நிலை தான் தரித்திரம் என்பது. தன்னிடத்தில் எதுவும் இல்லை என்று நினைப்பவருக்கும் தன்னால் எதுவும் முடியாது என்று நினைப்பவருக்கும் இந்த யோகம் இருப்பதாக பொருள்.

திரிகோணம் எனப்படும் 5, 9ம் அதிபதிகள் பலமிலந்து மறைவு ஸ்தானமான 6,8,12ல் அமர்வது அல்லது பார்வை செய்வதுவும் இந்த யோகமாகும். நல்ல மனம் படைத்த ஒருவர், தீயவர்கள் மத்தியில் தீய வேலையைச் செய்ய நியமிக்கப்பட்டது போல. இந்த யோகம் அமையும் நிலைகளில் சிலவற்றை காணலாம்.

  1. இலக்கினாதிபதி 12லும், 12ம் அதிபதி இலக்கினத்திலும் இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
  2. ஐந்தாம் அதிபதி ஆறிலும், 9ம் அதிபதி 12லும் இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
  3. இலக்கினத்தில் கேதுவும் இலக்கின அதிபதி 8ல்இருந்து 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.
  4. இராசி மற்றும் நவாம்சத்தில் இலக்கினாதிபதி அசுபர்கள் பார்வைபெற்று 2,7 ம் அதிபதிகளின் பார்வை அல்லது சேர்க்கைபெற்றிருப்பது.

இதைப் போன்ற கிரக சூழ்நிலைகளில் பிறந்தவர்களுக்கு தரித்திர யோகநிலை உள்ளது என்று பொருள்.  இந்த யோக நிலை 2,7 அதிபதிகளை துணைக்கு கொண்டுவருகிறது. காரணம், 2, 7ம் மாரகம் ( தன்னால் அனுபவிக்க இயலாத நிலை).

இந்நிலை உள்ளவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்றால், எதையும் ஏற்றுக்கொள்ளாத, திருப்திஅடையாத மனநிலையாக இருக்கும். சாப்பிடும் போது கூட ஐயோ வயிறு நிரம்பிவிட்டதே என்றுதான் கவலைப் படுவார்கள். இதற்கு பணம் பதவி என்ற நிலை இல்லை. நம்முடைய மனம் தான் இந்த நிலைக்கு காரணம். எவ்வளவு இருந்தாலும், தானும் அனுபவிக்காது அடுத்தவர்களுக்கும் கொடுக்காத நிலையும் தரித்திர யோக நிலைதான். இவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்ள வேண்டும்.

மற்றொன்று, நல்ல மனம் இருக்கும், கொடுக்க பணம் இருக்காது. நிம்மதியாக சாப்பிடக்கூட முடியாது. எவ்வளவு சேர்த்தாலும் நோய், கடன், இவற்றிற்கு செலவு செய்துவிடுவார்கள். அப்படி பட்டவர்கள் தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே வரவேண்டும். அப்படிச் செய்தால் பல்வேறு சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்று திருப்திகரமாக அமைந்து விடும்.

இந்த யோகம் இருப்பவர்கள் கையில் பணம் இருந்தால் அது வீணாக செலவாகிவிடும். அதனால் பெற்றோர் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் பெயரில் சேமித்துவிடவும். அப்படித் தவறும் பட்சத்தில் நம்முடைய பணம் நம்மையறியாமல் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கரைந்துவிடும் அதற்கு பதில் நாமே அதைமுறைப்படுத்தி வைத்துக்கொள்வது நலம்.

அனைத்து யோகங்களும் அதன் திசா புத்தி அந்தர காலங்களில் தான் செயல்பாட்டிற்கு வரும் அந்த காலங்களைக் கணித்து அந்த கால கட்டங்களில் நாம் இல்லாதவர்களாக இருந்தால் எப்படி உணர்வோமோ அதே உணர்வை அனுபவிக்க வேண்டும். உண்ணா நோம்பு பசியை உணர. சாதரணமான வாழ்க்கையை உணர காவி உடுத்தி யாத்திரை போதல், நோயுற்றவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் மற்றும் உதவி செய்தல் நோயின் வலியினை உணர. இப்படி நாம் செய்யும் செயல்கள் மூலம் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டால் அது விதியை அனுபவித்ததற்கு சமமாகவும் அதே சமயம் நாம் விருப்பப்பட்டு அனுபவித்த திருப்தியாகவும் அமையும்.