உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label மனைவியால் தோசம். Show all posts
Showing posts with label மனைவியால் தோசம். Show all posts

Saturday, February 28, 2015

agathiyar-arudam-tamil-1-3-2

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை மூன்றும்  மூன்றாம் முறை இரண்டும்வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-3-2

பாடல்

ஆமப்பா விழுந்த எண்தான் ஒன்று மூன்றிரண்டேயாகும்
காமத்தையளித்த மங்கை கைவிடுவாளேயுன்னை
ஷேமத்தை கெடுக்கவுந்தன் சொத்துக்களொழிந்து போகும்
போமப்பா உந்தன் கீர்த்தி பூஜிப்பாய் நவக்கிரகத்தை.

விளக்கம்

ஒன்றும், மூன்றும், இரண்டு விழுமானால் உனக்கு அபிமான தாரமாகிய ஓர் மங்கை உன் பொருள்கள் அனைத்தையும் அபகரித்து உன்னை கைவிடுவாள். அதனால் உன் நலம் கெடும். உனக்கு அபகீர்த்தி உண்டாகும். பலவிதமான கவலைகளும் உண்டாகும். ஆனால் இன்று முதல் ஒன்பது நாள் நவக்கிரக பூஜை செய் என்கிறார்.

Wednesday, February 11, 2015

agathiyar arudam tamil 1-1-2


agathiyar arudam tamil 1-1-2


அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும்.  நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறையும் ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-1-2

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.


 விளக்கம்

ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுமானால் உன் குடும்பத்தில் சீரழிவும், சிக்கல்களும் உண்டாகும். உனது புகழைக் கெடுக்க உன் மனைவியே துணையாயிருப்பாள். நீ நினைத்த எண்ணமும் முடிவதற்கு வெகுநாள் ஆகும் என்கிறார்.

Wednesday, July 3, 2013

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

ஆருடம் பலன்கள் – ஒன்று-ஒன்று-இரண்டு

அகத்தியரின் பாய்ச்சிகையை மூன்று முறை உருட்டும் போதும் ஒன்றும் ஒன்றும் இரண்டும் விழுந்தால்

பாரப்பா ஒன்று மொன்றும் பதறியே இரண்டும் வீழ்ந்தால்
சீரது வழிந்து போகும் சிக்குகள் பலவுண்டாகும்
பேரது கெடுக்கவுந்தன் பெண்டீரும் துணையே யாவாள்
கூறவே நினைத்த யெண்ணம் கூடாது நாள் தானாகவே.

கடந்த காலத்தில் நாம் செய்த வினைகளுக்குத் தக்கவாறு நிகழ்காலத்தில் விளைவுகள் நடக்கின்றன. அதை குறிப்பாக உணர்த்துவது தான் ஆருடம்.

பொறுமை வேண்டும். நிகழ்காலம் சாதகமான சூழ்நிலையில் இல்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் செய்த வினைப்பயனில் தொல்லைகளை மட்டும் அனுபவிக்கக் கூடிய காலமாக இது அமையலாம். குடும்பத்தில் அமைதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது. உணவுக்கட்டுப்பாடு, உடல்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக் கூடிய நிலை உண்டு. நினைத்த செயலில் வெற்றி பெற செயல்முறைகளை நன்கு ஆராய வேண்டும். ஒருவருக்கு இருவரிடம் நன்கு ஆலோசனை செய்து சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, நிதானத்துடன் செயல்பட வேண்டும்.. வாங்கிய கடனை அடைக்க உகந்த காலமாக அமையும். கல்வியில் தேக்க நிலை ஏற்படலாம்.

நற்பெயருக்கு களங்கம் வரும் என்பதால் எதிர்பாலினரிடம் (ஆணுக்கு பெண்ணும், பெண்ணிற்கு ஆணும்) கவனமாக நடக்க வேண்டும். அமைதியுடன் சிந்தித்தால்  வரும் தீவிரத் துன்பங்களைத் தவிர்க்கலாம். அல்லது குறைக்கலாம். சாதாரண நோய்களுக்சுட சிரத்தையெடுத்து வைத்தியம் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.

பொதுப்பலன்  - நிதானம்