-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label 1-6-1. Show all posts
Showing posts with label 1-6-1. Show all posts

Saturday, March 28, 2015

agathiyar-arudam-tamil-1-6-1

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை ஆறும் மூன்றாம் முறை ஒன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-6-1

பாடல்
தோன்றிடும் பகைதான் மெத்தடுர்ந்தொன்று மாரொன்றாகில்
ஆன்றோர்கள் தேடிவைத்த ஆஸ்தியுமழிந்து போகும்
கானபடும் கண்ணிதன்னில் மான்படும் கவலைபோலே
வான்பதிக்குள்ளே நீயும் வருந்தவே நேருமப்பா.


விளக்கம்
உனக்கு ஒன்றும், ஆறும், ஒன்றும் விழுந்தால் மிகவும் பகையுண்டாகும். பெரியோர்களின் பொருள் அழியும். வேடன் வைத்த கண்ணில் சிக்கிய மான் போல் கலங்கி நிற்கவும் நேரிடும். கடுமையான கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.தைரியத்தை விடாதே! சீக்கிரத்தில் நன்மையடைவாய் என்கிறார்.