-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label பயணத்தால் தொல்லை. Show all posts
Showing posts with label பயணத்தால் தொல்லை. Show all posts

Wednesday, April 22, 2015

agathiyar-arudam-tamil-2-1-1


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை இரண்டும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறை ஒன்றும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது


பாடல் 2-1-1

செய்யவேயிரண்டு மொன்றும் சேர்ந்ததொன்று விழுமானால்
பையவே பொருளும்போகும் பயணமே போகொணாது
மெய்யதாய் கலகமாகும் மனைவி மக்களும் பகைப்பார்
ஐயமில்லாம லெண்ணம் அபலமாய் போகக்கூடும்.

விளக்கம்
உனக்கு இரண்டும், ஒன்றும், ஒன்றும் உதயமானதால் அடிக்கடி பொருள் நஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும். மனைவி மக்களுடன் பிணக்கு உண்டாகும். எண்ணம் நிறைவேறாது எண்கிறார்.