-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label யோக பலன் நடக்கும் நிலை. Show all posts
Showing posts with label யோக பலன் நடக்கும் நிலை. Show all posts

Friday, February 27, 2015

agathiyar-arudam-tamil-1-3-1

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை இரண்டும் மூன்றாம் முறை ஒன்று வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-3-1

பாடல்
யோகமுண்டு ஒன்றும் மூன்றும் உடனொன்றும் விழுகுமானால்
ஏகமாய்ப் பொருள் சேரும் இடரின்றியெண்ணங்கூடும்
சாகவே வாய்ந்த நோயும் சுகமாகும் மருந்தினாலே
வேகமாய் செய்திதோன்றும் வியாபாரம் விர்த்தியாமே.

விளக்கம்
ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விருத்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.