அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
பாடல்
யோகமுண்டு ஒன்றும் மூன்றும் உடனொன்றும் விழுகுமானால்
ஏகமாய்ப் பொருள் சேரும் இடரின்றியெண்ணங்கூடும்
சாகவே வாய்ந்த நோயும் சுகமாகும் மருந்தினாலே
வேகமாய் செய்திதோன்றும் வியாபாரம் விர்த்தியாமே.
விளக்கம்
ஒன்றும், மூன்றும், ஒன்றும் விழுந்தால் நல்ல யோக பலாபலன்களைத் தரும். வேண்டிய பொருள் வீடுவந்து சேரும். எண்ணம் பலிக்கும். மரணமாக்க வந்த நோய் மருந்தினால் நீங்கும். நன்மையான செய்தியும் விருத்திகரமான வியாபாரமும் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி