-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, January 14, 2021

ஜோதிட வகுப்புகள் - ஆரம்ப நிலை -01

 திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.


தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா

மனம் தரும், தெய்வவடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


பெற்றோர்களுக்கும் ஜோதிடம் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த இயற்கைக்கும் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.


ஜோதிடம் கற்றுக்கொள்ள இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். 


அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.