-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்
Showing posts with label 1-3-6. Show all posts
Showing posts with label 1-3-6. Show all posts

Monday, March 16, 2015

agathiyar-arudam-tamil-1-3-6

அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை ஒன்றும் இரண்டாம் முறை மூன்றும்  மூன்றாம் முறை ஆறும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1-3-6

பாடல்
மீறியேவுந்தனை வாக்கை மனைவி மக்களும் நடப்பார்
தூறியே மிகுபேர் நஷ்டம் துணைவரால் வந்துநேரும்
ககரியம் கைகூடாது கவலையே அதிகரிக்கும்
தூரியே நோய்கள் காட்டும் துலைதூரம் செய்திதோன்றும்.

விளக்கம்
உனக்கு ஒன்றும், மூன்றும், ஆறும் விழுமானால் மனைவியும், மக்களும் உனது வாக்கை மீறி நடப்பார்கள். நண்பர்களினால் சண்டை பொருள் நஷ்டம் ஏற்படும். கவலைகள் அதிகரிக்கும். கொடுமையான நோயும், கெட்ட செய்திகளும் வரும்.காரியம் கைகூடாது போகும் என்கிறார் அகத்தியர்.