எழுதினால் என்ன கிடைக்கும்.
எல்லாம் கிடைக்கும். புகழ், பணம், பதவி இப்படி நேர்மறையாகவும் கிடைக்கும் விமர்சனம், அவமானம், அவமரியாதை இப்படியும் கிடைக்கக்கூடும். ஆனால் இவையெல்லாம் உங்கள் எழுத்துக்கள் பொதுவெளியில் பார்க்கப்பட்டால் தான். ஆனால் இங்கே குறிப்பிடப்படும் எழுதுதல் என்னும் செயல் திரும்பி வராத பலனைக் கொடுக்கக்கூடிய செயலாக அமைய வேண்டும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு எதிர்வினை உண்டு என்று இயற்கை உணர்த்திவருகிறது. நாம் செய்யும் செயலுக்கு எப்படி ஒரு பலன் கிடைக்கிறதோ, அதேபோலத் தான் நாம் அனுபவிக்கும் செயலுக்கும் ஒரு வினை இருந்திருக்க வேண்டும். இதைத்தான் விதி என்கிறோம். காலம் அனைத்து நிகழ்வுகளையும் தன் நினைவகத்தில் வைத்துள்ளது. காலத்தின் சட்டதிட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. காரணம், சட்டத்தை எழுதுவது நாம் தான். அவரவர்களுக்குரிய சட்டத்தை அவரவர் தான் நிர்ணயிக்கிறார்கள். அது தான் விதி. அந்த விதிப்படி நடப்பதும் நடக்க மறுப்பதும் நாம் தான். அது தான் நம் செயல்கள்.
ஒரு செயலை, மிகச் சரியான செயல் என்று என் ஆழ்மனம் அங்கிகரிக்குமானால் அது தான் அந்த செயலுக்கான என்னுடைய சட்டம். நீரோட்டத்தோடு செல்வது தான் மிகச் சரி என்று என் ஆழ்மனம் சொல்லுமானல் அது தான் என்னுடைய சட்டம். எந்தச் சூழ்நிலைகளிலும் நான் அதை மாற்றிச் செய்யக்கூடாது. நீரோட்டத்தை எதிர்த்து போராடலாம் என்று என் ஆழ்மனம் கட்டளையிட்டால் அதன் படி நடப்பது சட்டத்தின் படி நடப்பது ஆகும்.
ஆழ்மனம் .. அப்படியென்றால்...
தொடர்வோம்.....

No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி