-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, March 26, 2026

பஞ்ச புராணம் - ஓர் அறிமுகம்.

ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்...

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி.

தேவாரம், திருவாசகம், திருசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம் ஆகிய ஐந்து நூல்களும் பஞ்ச புராணம் என்று அழைக்கப்பெறுகிறது.  

பன்னிரு திருமுறைகளில் முதல் 7 திருமுறைகளை  திருஞானசம்பந்தர் 1 முதல் 3 வரை ,திருநாவுக்கரசர் 4,5,6 திருமுறைகளையும் , 7வது திருமுறையை சுந்தரரும்  பாடியுள்ளனர். இந்த 7 திருமுறைப்பாடல்களை இணைத்து அவற்றை நாம்  தேவாரப்பாடல்கள் என்கிறோம்.  பஞ்சபுராணப் பாடல்களில் முதல் பாடலாக அத்தேவாரப்பாடல்களில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. 

எட்டாம் திருறை - திருவாசகம். இது மாணிக்க வாசகப் பெருமானால் இயற்றப்பட்டது. திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார். அதுபோல தேனுக்கும் மேல் ஒப்பான திருவாசகம் பஞ்சபுராணப் பாடல்களின் இரண்டாவது பாடலாக இடம்பெற்றுள்ளது. 

ஒன்பதாம் திருமுறைகளான திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் பல்வேலு நாயன்மார்களால் பாடப்பட்டவை. பல நாயன்மார்கள் பாடியுள்ளனர். முக்கியமாக: திருமாளிகைத்தேவர், கருவூர்தேவர் , நம்பியாண்டார் நம்பி இன்னும் பலர். பல்வேறு அனுபவங்களைக் கொண்டது ஒன்பதாம் திருமுறை. அத் திருமுறையிலிருந்து 3 மற்றும் நான்காவது பாடல் பஞ்சபுராணப் பாடல்களாக ஓதப்படுகிறது. 

பன்னிரெண்டாம் திருமுறையான திருப்புராணம் எனப்படும் பெரியபுராணம் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் பெருமகானாரால் தொகுக்கப்ட்டது. அந்த 12ம் திருமுறைப் பாடல்கள் பஞ்சபுராணப் பாடல்களினல் 5வது பாடாலாக ஓதப்படுகிறது.

பன்னிருதிருமுறைகளில் உள்ள பாடல்களை தினமும் ஓதினால் உள்ளம் மேன்மையாகும். பிறவிப் பெரும்பயன் அடையலாம் என்கின்றனர் ஆன்றோர்கள். நாமும் தினமும் இந்த பஞ்சப் புராணப் பாடல்களை மனதார ஓதி சிவமயமாவோம்.


தொடரும்.



Saturday, April 30, 2022

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ...

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 33 விசயங்கள் :
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
30. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்
31. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
32. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
33. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Tuesday, July 20, 2021

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடைய ஜாதகம்

 இது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உடைய ஜாதகம் அவருடைய புகழுக்கும் அவருடைய பெருமைக்கும் இந்த ஜாதகத்தில் அப்படி என்ன உள்ளது.


பொதுவாக ஜாதகத்தில் லக்னமும் சந்திரனும் 2 / 12,  6 / 8 ஆக அமைவது சிறப்பான வாழ்க்கையை தராது.  இருப்பினும் இந்த ஜாதகத்தில் லக்னமும் சந்திரனும் 2 / 12 அமைந்துள்ளன. மேலும் சந்திரனுக்கு எந்தவித சுபக்கிரகங்களின் தொடர்பும் கிடைக்கவில்லை. மேலும் சனி செவ்வாயின் பார்வை சந்திரனின் மேல் விழுகின்றது. 


லக்னமும் சூரியனும் 6/8 அமைந்தால்  சிறப்பான தலைமைப் பொறுப்பைத்  தராது.  சூரியனுக்கு எந்தவித சுபகிரக தொடர்பும் இல்லை. செவ்வாயின் பார்வையிலும் கேதுவின் பார்வையிலும் சூரியன் அமர்ந்துள்ளார்.  குருவும் சூரியனும் சஷ்டாங்கமாக உள்ளனர்.


லக்னத்திற்கும் சுப பார்வைகள் கிடைக்கவில்லை. மேலும் லக்னாதிபதி கேதுவுடன் இணைந்து ராகுவின் பார்வையில் அமர்ந்துள்ளார்.  மேலும் லக்னாதிபதியும் சுப கிரகமான குருவும் சஷ்டாங்கமாக உள்ளனர்.



இப்படி இருக்க இந்த ஜாதகம் புகழ் பெற்றது எப்படி? 



லக்னாதிபதி சனி பத்தாம் வீட்டில்,  5-க்குடைய புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார்.அதாவது கேந்திரமும் கோணமும் தொடர்புடையதாக உள்ளது. 


 அதேபோல நான்கு மற்றும் 9ஆம் இடத்திற்கு  அதிபதியான சுக்கிரன் கும்ப லக்கினத்திற்கு யோக காரகர் ஆகிறார்.  இதுவும் கோணமும் கேந்திரமும் தொடர்புடையது. 

 

 தர்மகர்மாதிபதி யோகம் சந்திர லக்னத்தில் இருந்து அமைகிறது. சந்திரனுக்கு 9 , 10 கிரகங்கள் கேந்திரத்தில் இணைந்துள்ளன.

 

 நான்கில் உள்ள ராகுவின் திசையில் அவர் பெயரும் புகழும் பொருளும் கிடைக்கப் பெற்றார்.  வீடு மனைவி மக்கள் சொத்துக்கள் வாகனங்கள் சேர்க்கும் நான்காம் பாவம் ராகுவாக அமைந்ததால் கலைத்துறை மூலம் அவரால் சம்பாதிக்க  முடிந்தது.



ஜாதகத்தில் சாதகமான சூழ்நிலைகளும் அசாதாரணமான சூழ்நிலைகளும் இரண்டும் கலந்துதான் இருக்கும். முழுமையான சூப்பர் ஜாதகம் என்பதும் இல்லை முழுமையான பாவ ஜாதகம் என்பதும் இல்லை. இரண்டும் கலந்ததுதான் மனித வாழ்க்கை.  செவ்வாய் திசையில் சாதாரண வாழ்க்கையில் ஆரம்பித்த அவருடைய பயணம் அடுத்ததாக வந்த ராகு திசையில் கொடிகட்டி பறந்தது.  காரணம்,  அவருடைய விடா முயற்சி. அவர் ஏற்றுக்கொண்ட துறையில் ஏற்படுத்திக்கொண்ட தனித்துவம்.  இந்த தனித்துவமான செயல்தான், தொழில்தான், கர்மா தான்,  அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 


மக்கள் மத்தியில் அவ்வளவு செல்வாக்கு இருந்தும் நல்ல திறமை இருந்தும் அவரால் நடிப்பில் ஜொலித்த அளவிற்கு அரசியலில் அடியெடுத்து கூட வைக்க முடியவில்லை.  காரணம் , அரசியலுக்குரிய ஆளுமை கிரகங்களில் ஒன்றான சூரியன் எட்டில் மறைந்ததும் பன்னிரண்டில் சந்திரன் மறைந்ததும் காரணமாக அமைந்துவிட்டது.   ஆனால் கலைக்குரிய கிரகங்கள் அவருக்கு சாதகமாக இருந்ததால் அவர் ஏற்றுக்கொண்ட கலைத்துறையில் மட்டும் அவரால் வெற்றி பெற முடிந்தது. 


நீங்கள் ஏற்றுக்கொண்ட துறையில்,  ஈடுபாட்டுடன் பயணியுங்கள். முழு ஈடுபாட்டுடனும் முழு முயற்சியுடனும் தொடர்ந்து உங்களுடைய செயலை செய்து வந்தீர்களானால் அதனுடைய பலன் சரியான கால நேரங்களில் நிச்சயம் கிடைக்கும். 

Sivaji Ganesan horoscope research

Wednesday, June 30, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - விருச்சிகம் லக்னம்

விருச்சிகம் லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.

குருவும் சுக்கிரனும் இரண்டில் இணைந்திருப்பது விருச்சிக இலக்கிணகாரர்களுக்கு நல்ல சூழ்நிலைகளை உருவாக்கி வெற்றி பெற வைக்கும்.

குருவும் புதனும் சேர்க்கையோ பரஸ்பர பார்வையோ பெற்றிருப்பது சிறப்பான நிலை. இநத நிலை விருச்சிக இலக்கிணகாரர்களுக்கு நல்ல நிலையைத் தரும் 

ராகு 2-ல் இருப்பதும் ஒருவகையான நல்ல நிலைதான். 

#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.


Sunday, June 27, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - துலாம் லக்னம்

துலாம் லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.

சுக்கிரனும் கேதுவும் இரண்டாமிடத்தில் சேர்க்கை பெறுவது ஜாதகருக்கு நல்ல நிலையைக் கொடுக்கும. 

சனி லக்கினத்தில் இருப்பதும் சந்திரன் 4 அல்லது ஒன்பது அல்லது பத்தாம் இடத்தில் இருப்பதும் ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை நிலையை அளிக்கும். 

புதனும் சுக்கிரனும் சூரியனும் இணைந்து இருப்பது துலாம் இலக்கிணகார்களுக்கு நல்ல நிலையைத் தரும்.

#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.


Thursday, June 24, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - கன்னி லக்னம்

கன்னி  லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.


சுக்கிரனும் கேதுவும் இரண்டாம் இடத்தில் இணைந்திருப்பது

சந்திரனும் சுக்கிரனும் ஒன்பதாமிடத்தில் இணைந்திருப்பது 

குரு லக்கினத்தில் அல்லது ஏழாம் இடத்திலும் இருப்பது 

சனி 11-ஆம் இடத்தில் இருந்து திசை நடத்துவது 

புதன் சுக்கிரன் சனி சேர்க்கை பெற்றிருப்பது

வளமான வாழ்வைத் தரும்.


#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.


Sunday, June 20, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - சிம்மம் லக்னம்

 சிம்மம் லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.


1. இரண்டில் சூரியனும் 10-ல் குருவும் இருப்பது 

2. செவ்வாயும் சனியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது

3. சந்திரனும் சனியும் நாலாம் இடம் அல்லது பத்தாம் இடத்தில் இணைந்திருப்பது 

4. புதன் மற்றும் சுக்கிரன் இரண்டில் இருப்பது

5. புதன் இரண்டு அல்லது 10 அல்லது 11 ஆம் இடங்களில் இருப்பது

6. செவ்வாய் 1 அல்லது 6 அல்லது 9 இடங்களில் இருப்பதும் 

7. குரு 10 அல்லது 11 ம் இடங்களில் இருப்பதும் 

சிம்ம லக்ன காரர்கள் வளமாக வாழ்வதற்கான கிரக சூழ்நிலைகள் ஆகும்



#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.


Wednesday, June 16, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - கடகம் லக்னம்

 கடகம் லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.


சூரியன் மற்றும் செவ்வாய் பத்தாம் பாவத்தில் இணைந்திருப்பது ஜாதகருக்கு வளமான வாழ்க்கையை அளிக்கும்.

சந்திரனும் சுக்கிரனும் பத்தாமிடத்தில் இணைந்திருப்பது ஜாதகருக்கு வளமான வாழ்க்கையை அளிக்கும்.

புதனும் சுக்கிரனும் ஐந்தாம் பாவகத்தில் இணைந்திருப்பது ஜாதகருக்கு நல்ல நிலையை அளிக்கும்.

சந்திரன் செவ்வாய் மற்றும் குரு மூன்று கிரகங்களும் இரண்டாம் இடத்தில் இணைந்து இருப்பது நல்ல வாழ்க்கையை தரும்.

சூரியனும் சுக்கிரனும் ஐந்தாமிடத்தில் இணைந்திருப்பது ஜாதகருக்கு வளமான வாழ்க்கையை அளிக்கும்.

#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.

Sunday, June 13, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - மிதுனம் லக்கனம்

மிதுனம் லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.


1. சந்திரன் இரண்டு அல்லது 12ஆம் வீட்டில் இருந்தாலும்  

2. குரு சேர்க்கை பார்வை கிடைத்தாலும் 

3. புதன் சனி இணைந்து ஒன்பதாம் இடத்தோடு தொடர்பில் இருந்தாலும் 

4. குரு புதன் 4ம், 10-ஆம் இடங்களில் பரிவர்த்தனை பெற்றாலும் 

5. குருவும் சனியும் இணைந்து ஒன்பதாம் இடத்திலோ அல்லது பத்தாம் இடத்தில் இருந்தாலும் 


ஜாதகர் வளமோடு வாழ்வார்.

 

 

#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.

Wednesday, June 9, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - ரிஷப லக்கனம்

ரிசபம் லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.

 

புதனும் சனியும் இரண்டாம் இடத்தில் இருப்பது தன யோகம் ஆகும்.  (ஒன்பது பத்துக்குரிய தர்மகர்மாதிபதி யோக கராகனும் , இரண்டு மற்றும் ஐந்துக்குரிய புதனும் இணைந்திருப்பது) 

ரிஷப லக்னத்தில் லக்னாதிபதி இருக்க புதனும் சனியும் சேர்க்கை பெற்று லக்னத்தில் இருந்தாலும் பார்த்தாலும் செல்வம் சேரும்.

1,4,6, 7,9 ஆகிய வீடுகளில் சுக்கிரனும் சனியும் சேர்க்கை பெற்றோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்தால் பொருள் சேரும்.

சுக்கிரனும் சனியும், சூரியனும் சனியும், சூரியனும் புதனும், சனியும் புதனும் சேர்க்கையோ அல்லது பார்வையோ இருந்தால் நற்பலன்கள் உண்டாகும்

புதன் செவ்வாய் சேர்க்கை அல்லது சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை யோகத்தை தர வல்லது.


#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.


Sunday, June 6, 2021

பன்னிரெண்டு இலக்கிணங்களின் கிரக இணைவு பலன்கள் - மேஷம்

 மேஷ லக்னம் - முக்கிய கிரக இணைவுகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே காணலாம்.

செவ்வாய் குரு சுக்கிரன் இரண்டாமிடத்தில் சேர்க்கை பெற்றிருந்தால் அதிகமான செல்வம் கிடைக்க பெறுவார்கள். (மேசத்தில் செவ்வாய் ஆட்சி, ஒன்பதாம் இடமான தனுசு குருவின் ஆட்சி வீடு. இரண்டுக்குரிய சுக்கிரன் ரிசபம் ஆட்சி வீடு)

செவ்வாயும் சுக்கிரனும் ஏழாமிடத்தில் இருந்தால் தனது சுய முயற்சியின் பேரில் செல்வவளமும் சொத்துக்களும் கிடைக்கப் பெறுவார்கள்.  (மேசத்தில் செவ்வாய் ஆட்சி, இரண்டு மற்றும் ஏழுக்குரிய சுக்கிரன் ரிசபத்தில் ஆட்சி ).

சனி ராகு இணைந்து இருப்பது உடல் நலக் குறைபாடு உருவாகலாம் 


#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.






Thursday, April 15, 2021

சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்த நிர்ணயம்

 சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்த நிர்ணயம்

ஆதாரம்: கால விதானம்


உல்கா:

சூரியன் நின்ற நட்சத்திரத்திலி

ருந்து 19 வது நட்சத்திரம் உல்கா

எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.

Determining the auspicious time for auspicious events

 Source: kala vithanam 

 Ulga:

 19th star from the star of the sun 

#ABCServices_learn_astrology

https://chat.whatsapp.com/JmVNCF625zZE0kELNNbAPg


https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

தான் அறிந்ததை உலகறியச் செய்வோம்.

Thursday, January 14, 2021

ஜோதிட வகுப்புகள் - ஆரம்ப நிலை -01

 திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி

சனிபாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.


தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா

மனம் தரும், தெய்வவடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள், அபிராமி கடைக்கண்களே.


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


பெற்றோர்களுக்கும் ஜோதிடம் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்த இயற்கைக்கும் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.


ஜோதிடம் கற்றுக்கொள்ள இணைந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள். 


அன்புள்ள நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Sunday, December 13, 2020

ஒன்றுக்கு மற்றொன்று மாற்று

 *ஒரு முறை பயணிக்கும் போது புலவர் காளிதாசனுக்கு மிகவும் தாகமாக இருந்தது. அப்போது ஒரு பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதைப் பார்த்தார்*.

*கிணற்றடிக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டார்.*

*பெண்: "தருகிறேன். ஆனால் நீங்கள் யார்? உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்" என்றாள்*.

*காளிதாசர்: தான் யார் என்று இந்த கிராமப்புற பெண் அறிய அருகதை அற்றவள் என்று எண்ணினார்.* 

*எனவே, "நான் ஒரு பயணி" என்றார்.*

*பெண்: "இந்த உலகில் இரண்டே பயணிகள்தானே உண்டு. அது சூரியனும் சந்திரனும் ஆகும். தினமும் உதித்து பிறகு அஸ்தமித்து சதா பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்".*

*காளிதாசர்: "சரி. அப்படியானால் நான் ஒரு விருந்தினர்" என்றார்*

*உடனே அந்த பெண்: இந்த உலகில் இரண்டே விருந்தினர்தானே உண்டு - இளமையும் செல்வமும்... இரண்டும் தற்காலிக மானவை. எனவே அவற்றைதான் விருந்தினர் என்று ஏற்க முடியும்" என்றாள்.*

*ஆச்சரியப்பட்ட காளிதாசர்: "சரி, நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்" என்றார்.*

*அதற்கு அந்த பெண்: இந்த உலகில் இரண்டே பொறுமைசாலிகள்தான் உண்டு. அவை, பூமியும் மரமும் ஆகும். யார் பூமியை எத்தனை மிதித்தாலும், பழத்திற்காக மரத்தின் மேல் எத்தனை கல் எறிந்தாலும், அவை பொறுமையாக இருக்கின்றன" என்றாள்.*

பொறுமை இழந்த காளிதாசர்: "மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்" என்றார்.*

*அதற்கு அந்த பெண்: புன்னகையோடு இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டுதான் - நம் நகமும் தலைமுடியும் ஆகும். நாம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்" என்றாள்.*

*பொறுமை இழந்த காளிதாசர், கோபமாக, "சரி, நான் ஒரு முட்டாள்" என்றார்.*

*அந்த பெண் சிரித்துக்கொண்டே,* 

*"இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும்,* *அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்" என்றாள்.*

*தான் தோல்வி அடைந்ததை உணர்ந்த காளிதாசர் அந்த பெண்ணின் கால்களில் விழுந்து அவள் பாதங்களைப் பற்றி பின் எழுந்த போது,* *தான் கண்ட காட்சியில் உறைந்து விட்டார்.* 

*கற்பித்தல் மற்றும் அறிவுக்கும் கடவுள் ஆன அன்னை சரஸ்வதியை அங்கே காட்சி தந்து, "காளிதாசா, நீ புத்தி உள்ளவன்.* *ஆனால் நீ உன்னையே உணர்ந்தால்தான் நீ மனுஷ்யா.* *எவன் ஒருவன் தன்னை அறிவதில்லையோ அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை" என்று ஆசீர்வதித்தார்.

படித்ததில் பிடித்தது.

Saturday, November 14, 2020

நிறைய முதலீடு செய்யுங்கள்

நிறைய முதலீடு செய்யுங்கள். அதிகமாக முயற்சி செய்யுங்கள். காலம் கனியும் போது உங்களுடைய முதலீடுகள் முயற்சியின் காரணமாக அதிக பலனைத் தரக்கூடும். 

உங்களுடைய முதலீடுகள் பணமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல உடல் நலமும், நல்ல எண்ணங்களும் கூட உங்களுடைய முதலீடுகள் தான். 

உங்களின் பொருளுக்கு நீங்கள் தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  பொருளோ சேவையோ உங்களிடம் தரமாக கிடைக்கும் என்றால் நிச்சயம் சந்தை உங்களைத் தேடி வரும். அதற்கு சிறிது விளம்பரம் நிச்சயம் தேவை அதேசமயம் பொருளோ சேவையோ தரம் குறைந்து இடருந்தால் நீங்கள் சந்தையை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் நிறைய விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படும்.

Friday, November 13, 2020

பைசா செலவில்லாமல் புண்ணியம்

பைசா செலவில்லாமல் புண்ணியம்

வாய்ப்புக்கள் கிடைக்காதபோது தன்னால் இயலாத பொழுது ஒழுக்கமாக இருந்து பயனில்லை சாப்பிடும் உணவு இருந்தும் நல்ல உடல் இருந்தும் விரதத்தை மேற்கொள்வது புண்ணியம்.

வாகனத்தை மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாத அளவிற்கு ஓட்டுவது புண்ணியம்.

தன்னிடம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக தேவை இல்லாமல் செலவு பண்ணாமல் இருப்பது புண்ணியம்.

பெற்றோருக்கு பிடித்த நல்ல உணவை மனம் கோணாமல் பரிமாறுவது புண்ணியம்.

உடன்பிறந்தவர்கள் தன் அளவுக்கு உயர்வு பெற உதவி செய்வது புண்ணியம்.

உடல் அழகை வெளிக்காட்டாமல் அடக்கமாக இருப்பது புண்ணியம்.

தனக்குத் தெரிந்த உண்மை கருத்துக்களை பொதுவெளியில் உரக்கச் சொல்லுவது புண்ணியம்.

பஞ்சபூதங்களை பாழ்படுத்தாமல் இருப்பது புண்ணியம்.

தன்னை நம்பியவர்களை ஏமாற்றாமல் இருப்பது புண்ணியம்.

சரியான எடையில் பொருள்களை விற்பனை செய்வது புண்ணியம்.

தன்னிடம் மட்டுமே கிடைக்கும் என்றாலும் அதிகமாக லாபம் சேர்த்து விற்பனை செய்யாமல் இருப்பது புண்ணியம்.

அடுத்தவர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளாமல் இருப்பது புண்ணியம்.


Business consultancy service based on your requirements with your horoscope

https://www.facebook.com/groups/3153466734740198/?ref=share

Join with us in telegram

https://t.me/Vedhajothidam

Or mail us

Info@Vedhajothidam.in

Or Whatsapp number

83007 68867















Sunday, July 19, 2020

தத்துவங்கள் வெறும் வார்த்தைகளா

இணையம் முழுவதும் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதை பயன்படுத்தும் வழிமுறைகள் தான் இன்னும் நமக்கு தெரியவில்லை. அறம் செய்ய விரும்பு என்று ஔவை கூறி ஆண்டுகள் பல ஆயிற்று. இன்னும் விரும்ப கூட நமக்கு மனமில்லை. காரணம் அறம் என்பதன் அர்த்தம் புரியவில்லை.

தினமும் லட்சம் தத்துவங்கள் பரிமாறப்படுகின்றன, வெறும் வார்த்தைகளால். அதில் ஒன்றே யாயினும் நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்தால் இந்நேரம் பழைய தத்துவங்கள் பழகிப்போய் புதிய தத்துவங்களின் தேவை ஏற்பட்டிருக்கும்.

எண்ணங்கள்தான் வாழ்க்கை. பைசா செலவில்லாமல் நல்லதை நினைக்க கூட நமக்கு மனம் இல்லை. அப்படியே நினைத்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு வெட்கப்படுகிறோம். அப்படி நடைமுறைப்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை என்றால் விரக்தி  ஆகிவிடுகிறோம் அதனால் மீண்டும் எண்ணுவதற்கு தயங்குகிறோம்.

தொடர்ந்து முயற்சி செய்வோம்.
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.


Sunday, July 12, 2020

யோகங்கள்

யோகங்கள்
இயற்கை அனைவருக்கும் நல்ல  வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. நாம்தான் அதை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் அனைவரும் யோகக்காரர்கள் தான்.  அனைவருடைய ஜாதகத்திலும் குறைந்தபட்ச யோகங்கள் நிச்சயம் இருக்கும். யோகங்களின் தசாபுக்தி காலங்களில் நிச்சயம் நல்லபலன் நடக்கும். இது அனைவருக்கும் பொதுவானது. அதனால்,  எந்த யோகம்  எந்தக் காலம் செயல்படும் என்பதை உணர்ந்து அந்தச் சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.


info@vedhajothidam.in

Friday, July 10, 2020

எல்லாம் நிரந்தரம் எதுவும் மாறப்போவதில்லை

எல்லாம் நிரந்தரம் எதுவும் மாறப்போவதில்லை. இந்த உலகம் நிரந்தரமானது.  இயற்கை நிரந்தரமானது. சூரியனும் சந்திரனும் கோள்களும் நிரந்தரமானவை. தனிமனித பிறப்பும் இறப்பும் நிரந்தரமானது. தோற்றமும் அழிவும் நிரந்தரமானது. எல்லாம் நிரந்தரம் எதுவும் மாறப்போவதில்லை. ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஏன் கூறுகிறார்கள் மாற்றம் என்பது அடிப்படை மாற்றம் அல்ல.  உங்களுடைய எண்ணங்களில் ஏற்படும் செயல்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் மாறாதது என்று சொல்கிறார்களே தவிர அடிப்படை எதுவும் மாறக்கூடியது அல்ல.  மாற்றவும் முடியாது. எல்லாம் நிரந்தரம். இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்னுடைய வாழ்க்கை முறை தினந்தோறும் மாறிக்கொண்டே தானே இருக்கிறது. 

என் முப்பாட்டன் வாழ்ந்த காலத்திலிருந்த பழக்கவழக்கங்கள் என் பாட்டனாரிடம் இல்லை. என் பாட்டனிடம் இருந்தது என் தந்தை காலத்தில் மாறி விட்டது.  என் தந்தையாரிடம் இருக்கக்கூடிய எண்ணங்கள் எனக்கும் இருக்கவேண்டிய அவசியமில்லை. இருக்கவும் இல்லை.  இதுதான் மாற்றம் எனப்படுகிறது. இந்த மாற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறதா? இல்லை. ஏன்?  மாற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.  ஆனால் அதனுடைய  அடிப்படைத்தேவைகள் மாறுவதில்லை.  உதாரணமாக நாம் உண்ணும் உணவை எடுத்துக் கொள்வோம். நாம் உயிர்வாழ்வதற்கு உணவு என்ற ஒன்று மிக மிக அவசியமான அடிப்படையான ஒன்று. நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பு இருந்த உணவு பழக்கவழக்கங்கள் உணவு பண்டங்கள்  இப்பொழுது இல்லை. இருக்கும் முறைகளும் நாளை அப்படியே கடைப்பிடிக்கப்படும் என்பதிலும் உறுதியில்லை. இங்கே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது ஒரு சாரார் கருத்து. ஆம் இன்று பீட்சாவும் பர்கரும் சாப்பிட முன்வந்த நாம் கடந்த தலைமுறையில் இட்லியை மிகப்பெரிய உணவாக கருதினோம் அதற்கு முன்பு வேக வைத்த பொருட்களை விரும்பினோம் அதற்கு முன்பு பச்சையான காய்கறிகளையும் விரும்பினோம் அன்றிலிருந்து இன்றுவரை உணவு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  நம் நாவின் ருசிக்கும் திறன் கூட மாறிக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படி என்றால் எல்லாம் மாறிவிட்டது என்று தானே அர்த்தம்.  ஆம் எல்லாம் மாறிவிட்டது. ஆனால் ஆனால் பசி நிரந்தரமாகத் தானே  இருக்கிறது.  பசி என்ற ஒன்று இல்லை என்றால் உங்களுடைய உணவு பழக்கங்கள், உணவுகள், நாவின் ருசி எதற்கும் பயனில்லாமல் போய்விடும். இங்கே நிரந்தரம் என்று குறிப்பிடப்படுவது பசி என்ற ஒன்று தான்.  அந்த பசி என்ற ஒன்றுக்காக நாம் செய்யும் முயற்சிகள் அதனுடைய விளைவுகள் தான் மாறிக்கொண்டிருக்கின்றன தவிர அடிப்படையில் பசி என்ற ஒன்று மாறாதது மாற்றவும் முடியாது.  இந்தக் கருத்தில் தான் ஜோதிடத்தை அணுகமுடியும்.  ஜோதிடத்தில் கூறப்படும் கருத்துக்கள், அடிப்படை கருத்துக்கள். வாழ்வில் முக்கியமான, தேவையான கருத்துக்கள்.