-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, October 26, 2012

விதி மதி கதியின் ஜோதிட சூட்சுமம்.

வளிமண்டலத்தில் உள்ள கிரகங்கள் நாம் வசிக்கும் இடத்தில் ஏற்படத்தும் தாக்கத்தைப் பற்றி கூறுவது தான் ஜோதிடம். அந்தத் தாக்கம் உடல் ரீதியாகவும் இருக்கலாம் மன ரீதியாகவும் இருக்கலாம்.

பொதுவாக விதி என்பதை நம்மால் மாற்றமுடியாதது என்ற பொருளில் இதுவரை நாம் பயன்படுத்தி வருகிறோம். மதி என்பது நாம் சிந்திக்கும் மனம் என்ற பொருளிலும், கதி என்பது இறுதி வாழ்க்கை நிலை என்ற பொருளிலும் கையாளப்படுகிறது.

விதி என்பது நம்முன்ஜென்ம வினைகளின் பலன். மதி என்பது இப்பிறவி.  கதி என்பது நாம் சென்றடையும் இடம். இந்த நிலையில் ஜோதிடம் இதனை எவ்வாறு எடுத்துக் கூறுகிறது என்பதனைப் பார்க்கலாம்.

விதி என்பது இலக்கினம். (ஜெனன ஜாதகம்) நாம் பிறந்த நேரத்தில் வான் மண்டலத்தில் சூரியன் உதிக்கும் ராசியே நமது இலக்கினம். இந்த சனப் பொழுதில் வான் மன்டலத்தில் உள்ள கிரகங்களை ஒரு ஒழுங்கு வடிவமைப்பில் எழுதும் போது கிடைப்பது தான் ஜாதகம். இவ்வுலகிற்கு நாம் கொண்டுவருவது தான் ஜாதகம். ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் ஒருவகை காந்த சக்தி புவியை வந்தடைகிறது. அந்த காந்த சக்தியை முதலில் உணரும் அந்த நேரம் தான் நம்முடைய ஜனனமாகிறது. நவகோள்களில் இருந்து வரும் இந்த காந்த சக்தி நம்முடைய உள்ளத்திலும் உடலிலும் ஏற்படுத்தும் பாதிப்பு தான் நம்முடைய வாழ்க்கை முறை. இந்த முறையில் நமக்கு ஏற்படக்கூடிய நிகழ்வுகளின் போக்கை காட்டக்கூடிய கண்ணாடி தான் ஜாதகம். அதற்கு முக்கியம் இலக்கினம். அதனால் அதனை விதி என்கிறோம்.

மதி என்பது நட்சத்திரங்கள் (திசா புத்தி அந்தரங்கள்). நாம் வசிக்கும் இப்புவியின் துணைக்கோள் சந்திரன். மிக மிக அருகில் இருக்கும் இந்தக் கோள் தான் நம்முடைய மனதை ஆள்கிறது. நாம் எவ்வாறு எண்ணுகிறோமோ அவ்வாறே நாம் வாழ்கிறோம் என்பது தான் உண்மை. அப்படி இப்பிறவியில் நாம் வாழும் நிலைதான் இந்த சந்திரன் என்படும் மதி. மனம் என்பது நிலையில்லாதது காரணம் சந்திரனிலிருந்து வரும் காந்த அலைகள் தினம் தினம் கூடுவதும் குறைவதுமாக இருப்பது தான். நாம் பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திர சாரத்தில் பயணிக்கிறதோ அது தான் நம்முடைய ஜனன நட்சத்திரம். இதன் மூலம் தான் திசா புத்தி அந்தரம் என்பது கணக்கிடப்பட்டு காலச் சக்கரத்தின் போக்கு வகைப்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு கிரகமும் எந்த நட்சத்திரத்தின் சாரம் வாங்கியுள்ளதோ அந்த நட்சத்திரஅதிபதிகளின் பிரதிபலிப்பு தான் ஜோதிடம் கூறும் பலன்கள்.

கதி என்பது கோச்சாரம். இன்றைய கிரக சூழ்நிலைகள். இன்றைய பொழுதில் கிரகங்களில் இருந்து வரும் காந்த அலைகள் நம்மிடம் பிறக்கும் போது வந்து சேர்ந்த காந்த அலைகளிடம் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் கோச்சார பலன்கள். இப்படி நம்மைச் சேர்ந்த காந்த அலைகளின் போக்கு தான் நாம் இறுதியில் போய்ச் சேரும் இடம். இது தான் கதி என்பது. 

பொதுவாக ஜோதிடத்தில் விதி, மதி, கதி என்பது எப்பொருளில் எடுத்துக் கொள்ளப்பட்டுவருகிறது என்றால்?  விதி என்பது இலக்கினம். மதி என்பது சந்திரன் நிற்கும் ராசி. கதி என்பது சூரியன் நிற்கும் ராசி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இலக்கினம் சந்திரன் சூரியன் இம்மூன்றில் எது வலுவாக இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்துத்தான் பலன்கள் நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஜனன ஜாதகம், திசாபுத்தி அந்தரம், கோச்சாரம் இந்த நிலைதான் விதி மதி கதி என்பதாக எடுத்துக்கொண்டோமானால், ஜனன ஜாதகம் நடக்க இருக்கும் வினை என்ன என்று காட்டும். திசா புத்தி அந்தரங்கள் அந்த வினை எப்பொழுது என்று காட்டும். கோச்சாரம் அவ்வினையால் நாம் அடையும் திருப்தியைக் காட்டும்.


1 comment:

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி