-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Wednesday, August 8, 2012

வினைப் பயன்

வழிபாடுகள் வினைப் பயனை மாற்றிவிடுமா?

ஜோதிடத்தில் ஆத்திகனுக்கும் நாத்திகனுக்கும் ஒரே பலனா?

ஜோதிடம் தனி மனிதனுக்குத் தான். அவன் கடவுளை ஏற்பவனா, இல்லை மறுப்பவனா என்றெல்லாம் கிடையாது. மனிதப் பிறவியாய் பிறப்பவன் தான் செய்த முற்ஜென்ம வினைகளுக்குத் தக்கவாறு பிறவி எடுக்கிறான். அந்த ஜென்ம வினைப் பயனை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும். நாம் பிறக்கும் போது கொண்டு வந்த அந்த வினைப்பயனை எவ்வாறு அனுபவிக்கப் போகிறோம் என்பது தான் ஜோதிடம். இதில் கடவுள் மறுப்போ அல்லது ஏற்போ இல்லை. யாவருக்கும் பொது தான். கடவுளே மனிதனாய் பிறந்தாலும் இதே நிலைதான்.

ஆன்மீகம் வேறு. ஜோதிடம் வேறு. எவ்வாறு வாழ வேண்டும் என்று காட்டுவது ஆன்மீகம். எவ்வாறு வாழப் போகிறோம் என்று கூறுவது ஜோதிடம். தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

கடவுள் வழிபாடு நம் மனதை பக்குவப் படுத்தி, வாழ்க்கையின் இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க நாம் தோ்ந்தெடுக்கும் ஒரு பாதை தான். இதன் மூலமாக இனி வரும் காலங்களில் நாம் தவறு செய்யாமல் இருக்கமுடியுமேயன்றி கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்கான தண்டணையிலிருந்து தப்ப முடியாது. எனவே ஜோதிடம் கூறும் பலன்கள் அனைவருக்கும் பொதுவானது. எந்தச் சூழ்நிலையிலும் அதனை மாற்ற முடியாது.

தவறுக்காக வருந்துபவன் தண்டனையை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்கிறான். தன்னால் பாதிக்கப்பட்வருக்கோ அல்லது அதே மாதிரி பாதிக்கப்பட்டவர்களுக்கோ உதவி செய்கிறான். இது அவன் தவறை உணர்ந்ததன் அடையாளமாகுமே தவிர, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. நாம் செய்த தீவினைப் பயனுக்கு நாம் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதேபோல செய்த நல்லவினைப் பயனுக்குரிய பலனையும் நாம் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளோம். இங்கே ஆத்திகனும் நாத்திகனும் ஒன்றுதான்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி