-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, August 23, 2012

சகுனங்கள் ஏன் பார்க்கப்பட வேண்டும்

சகுனங்கள் ஏன் பார்க்கப்பட வேண்டும்
ஜோதிட சூட்சுமங்கள்.

எந்த ஒரு செயலும் முன் அறிவித்தல்கள் இன்றி நடைபெறுவதில்லை. இது நிச்சயமான ஒன்று. இந்த அறிவித்தல்கள் தான் சகுனங்கள்.
நாம் ஒரு செயல் செய்ய முயலுகிறோம் அது எவ்வாறு நடக்க இருக்கும் என்பதற்கான அறிகுறியே இந்த சகுனங்கள். அதை உணர்ந்தால் உண்மை தெரிய வரும்.

சகுனங்கள் எதேர்ச்சயாக நடப்பதே ஆகும்.

பூனை குறுக்கே போனால் என்ன ஆகிவிடப்போகிறது. ஆனால் ஏன் குறுக்கே போகவேண்டும். தினமும் நான் நடக்கிறேன் அன்றும் நடக்கிறேன். அனைவரும் நடக்கின்றனர் ஆனால் நான் அன்று செல்லும் போது மட்டும் ஏன் குறுக்கே செல்ல வேண்டும். அப்பொழுது ஒரு செய்தி உணர்த்தப் படுகிறது. அந்த செய்தியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கழுதைபடத்தைப் போட்டு என்னைப் பார் யோகம் வரும் என்கிறார்கள். அதை வீட்டு வாசலில் கட்ப்போட்டு தினமும் காலையில் பார்த்து வந்தால் அது யோகமாகாது. அது போலத்தான் அனைத்து சகுனங்களும்.

அதற்காக சகுனங்கள் பார்த்துத்தான் அனைத்து முடிவும் எடுக்க வேண்டும் என்பதற்கில்லை. நீங்கள் ஒரு செயலை செய்ய முடிவெடுத்த பின்பு அதை எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம் என்பதற்கான ஒரு முன் அறிவித்தல் தான் இந்த சகுனங்கள்.

நாம் வேகமாக பயணிக்கும் போது நமக்கு முன்னே செல்பவர் இடறிவிழுந்தால் நாம் என்ன செய்வோம் ஒரு நிமிடம் யோசித்து நம் வேகத்தைக் குறைத்து செல்வோம். ஏன் அதன் பாதிப்பு நம்மை சிந்திக்க வைக்கிறது. அதே சமயம் ஒரு சுவாமி நகர்வலம் வருகிறது அப்பொழுதும் நாம் வேகத்தைக் குறைத்து இறைவனை ஆத்மார்த்தமாக வணங்கி செல்வோம். இரண்டு நிலைகைளுக்கும் உள்ள வேறுபாடு என்ன. நாம் மெதுவாகச் சென்றது உண்மைதான். ஆனால் நம் மனம் உணர்ந்தது என்ன? முன்னது விபத்து பின்னது யோகம். இது தான் சகுனம்.

சகுனங்களில் நல்லது எது கெட்டது எது?

சகுனங்கள் என்பது ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வு உங்கள் மனதை மகிழ்ச்சி படுத்துமானால் அது நல்ல சகுனம். அதனால் நீங்கள் உற்சாகமாகிவிடுவீர்கள் உங்கள் செயல் இன்னும் வேகமாக திருப்தியாக நடைபெறும்.

ஒரு நிகழ்வு உங்கள் மனதை காயப்படுத்துமானல் அதற்காக நீங்கள் மனவருத்தம் அடைந்தால் அது உங்கள் செயல் நிலையை பாதிக்கும் பொறுமைகாத்து அந்த செயலை செய்வது அவசியம்.

எந்த ஒரு நிகழ்வு உங்கள் மனதை பாதிக்கவில்லையோ அது சகுனம் ஆகாது என்பது அர்த்தமில்லை. நீங்கள் அதை சரியாக உணரவில்லை என்று அர்த்தம்.

நமக்கு நடக்கஇருப்பதை கோள்கள் நமக்கு கண்டிப்பாக உணர்த்தும். நாம் தான் உணரவேண்டும். அது தான் ஜோதிடம்

1 comment:

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி