-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, June 28, 2013

அகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆருடம்.

அகத்தியர் அருளிய பாய்ச்சிகை ஆருடம்.

மனிதர்கள் நல்லமுறையில் வாழ மாமனிதர்கள் மற்றும் சித்த புருசர்களால் தொகுக்கப்பட்டதே ஜோதிடம். மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நிகழும் நிகழ்வுகள் எவ்வெப்பொழுது நடைபெறும் என்பதை விளக்கக்கூடியதே ஜோதிடம். விண்வெளியில் உள்ள கோள்களின் காந்த சக்தி இப்புவியில் வாழும் மனிதர்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதே ஜோதிடம். ஒருவருடைய எண்ணங்களும் செயல்களும் தரும் பலன்கள் கோள்களின் தாக்கங்களினால் அதிகமாகவோ குறைவாகவோ மாற்றியமைக்கப்படுகின்றன. கோள்கள் தரும் சாதக பாதக பலன்களை முன்கூட்டியே உணர்ந்து கொண்டால் அதற்குத் தகுந்தவாறு செயல்பட முடியும்.

எந்த ஒரு செயலும் முன்அறிவித்தல்கள் இன்றி நடைபெறுவதில்லை. நமக்கு நடக்கும்  விதிப்பயன்கள் நமக்கு முன்கூடிய அறிவுறுத்தப்படுகிறது. அதை நாம் தான் உணர வேண்டும். அந்த அறிவுறுத்தல்களைத் தான் சகுனங்கள் என்று கூறுகிறோம். நாம் செய்ய இருக்கும் செயலின் விளைவை முன்கூட்டித் தெரிவிக்கும் இந்த நிமித்த முறையினை  முறைப்படுத்தி வகைப்படுத்தி சித்த புருசர்கள் எழுதி வைத்துள்ளனர். அவற்றில் மிகச் சிறப்பானது தான் அகத்தியரின் பாய்ச்சிகை ஆருடம்.

பிறந்த நேரத்தைக் கணக்கில் கொண்டு கணிக்கப்படும் ஜாதகம் மூலம் கிடைக்கும் பலன்கள் வாழ்க்கை முழுமைக்கும் பயன்படும். செயல் செய்ய முற்படும் போது அந்தச் செயல்கள் வெற்றியைத் தருமா என்பதை உணர்த்துவது தான் ஆருடம்.  அந்த நேரத்தில் நாம் எண்ணிவந்த காரியம் முழுப்பலன் தருமா?, காரியத்தடை ஏற்படுமா? என்பதை செயலில் இறங்கும் முன்பே தெரிந்து அதன்படி நடந்தால் சுலபமாக செயலில் வெற்றி பெற முடியும்.

அகத்தியரின் பாய்ச்சிகை ஆருடம்.  ஒரு சதுரக்கட்டையில் 1,2,3 மற்றும் 6 என்று நான்கு புறமும் வரையப்பட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். அப்படி கிடைக்கும் எண்களுக்கு ஆருடம் தரும் பலன்களைக் கொண்டு நம்முடைய செயல் தருப்போகும் விளைவைத் தெரிந்து கொள்ளலாம்.

மூன்று முறை உருட்டும் போது கிடைக்கும் எண்களின் தொகுப்பு மொத்தம் 64. உம். 1-1-1, 1-1-2, 1-1-3, 1-1-6, 2-1-1, 2-1-2, 2-1-3…..இப்படியாக மொத்தம் 64 விதமான விடைகள் நமக்கு கிடைக்கும் இந்த அருபத்திநான்கிற்கும் அகத்தியர் பலன் கூறியிருக்கிறார். வெற்றி தோல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது சமமானது என்பது இங்கே உணர்தப்படுகிறது.
மொத்தம் 64ல் 32 சாதகமான பலன்களாகவும். மற்றொரு 32 பாதகமான பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது. திவ்ய திருஷ்ட்டியால் தாங்கள் உணர்ந்ததை அனைவருக்கும் உணர்த்த செய்யுள் வடிவில் அகத்தியர் கொடுத்ததை கருத்துமாறாமல் இன்றைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதற்கு முன் வந்த விளக்கங்கள் எல்லாம் செய்யுலை உரைநடை வடிவில் தான் கொண்டுவந்தன. ஆனால் இந்த முயற்சி செய்யுளை உரைநடை வடிவில் தருவதோடு நின்றுவிடாமல் பிரச்சனைகளோடு கலந்து தீர்வையும் தரும் முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று திருப்பரங்குன்றம் முருகப்பெருமானை குருவாய் நினைத்து அவர் மலரடி பணிந்து தொழுது தொடர்கிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி