-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, April 14, 2020

சார்வரி - தமிழ் வருடம்

வாசிப்பவர்கள் அனைவருக்கும் இனிய சார்வரி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இப் புத்தாண்டில்  அனைவரின் நெஞ்சங்களிலும் அன்புணர்வும், அறவுணர்வும் மேலோங்க செய்ய இயற்கையை மதித்து போற்றி பாதுகாப்போம்.

இயற்கை தன்னுடைய விதித் திட்டத்தை செயல் படுத்திக் கொண்டே இருக்கும். யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காது. இதன் சாரம்சத்தை தெரிந்து கொள்வதற்காகத் தான் ஜோதிடம் உருவாக்கப் பட்டது.   எந்த ஒரு செயலும் முன் அறிவித்தல்கள் இல்லாமல் நடத்தப்படுவதில்லை. அப்படிப் பட்ட முன் அறிவித்தல்கள் தான் ஜோதிட பலன்கள்.

இவ்வருடத்திய முன் அறிவித்தல் தான் “சார்வரி வருடத்திய வெண்பா:“

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள், மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு...


இந்த வெண்பா இடைக்காடர் சித்தரால் பாடப் பட்டதாகச் சொல்லப்  படுகின்றது. இப் பாடல் மூலம் நாம் புரிந்து கொள்வதுயாதனெனின், நோயாலும் மழையில்லாமலும் நாம் அவதிப்பட நேரும் என்பதாகும். இது இன்றைய சூழ்நிலையில் நாம் அனுபவித்து வருவது தான். 

இதோ ஒரு கவிஞனின் கூற்று. படித்து புரிந்து உணர்ந்து பின் நிற்க அதற்குத் தக.


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!


படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!


அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!


அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!


பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!


பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!


முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!


இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!


'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!








.
.
.
.
.
.ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!



வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும்.
உங்கள்
வேத ஜோதிடம்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி