-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Saturday, November 14, 2020

நிறைய முதலீடு செய்யுங்கள்

நிறைய முதலீடு செய்யுங்கள். அதிகமாக முயற்சி செய்யுங்கள். காலம் கனியும் போது உங்களுடைய முதலீடுகள் முயற்சியின் காரணமாக அதிக பலனைத் தரக்கூடும். 

உங்களுடைய முதலீடுகள் பணமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல உடல் நலமும், நல்ல எண்ணங்களும் கூட உங்களுடைய முதலீடுகள் தான். 

உங்களின் பொருளுக்கு நீங்கள் தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.  பொருளோ சேவையோ உங்களிடம் தரமாக கிடைக்கும் என்றால் நிச்சயம் சந்தை உங்களைத் தேடி வரும். அதற்கு சிறிது விளம்பரம் நிச்சயம் தேவை அதேசமயம் பொருளோ சேவையோ தரம் குறைந்து இடருந்தால் நீங்கள் சந்தையை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் நிறைய விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படும்.