-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, January 24, 2020

படித்ததில் பிடித்தது கழுகும் யானையும்

கழுகு ஒன்று மரத்தின் மேல் அமர்ந்தபடி தன்னுடைய பெருமைகளை மனதிற்குள் அசைபோட்டு கொண்டிருந்தது.....
 ' அடடா ....எத்தனை கூரிய நகங்கள் எனக்கு?...எந்தக் கடினமான தோலையும் கிழித்து விடுவேனே! ....
அது மட்டுமா ?...எத்தனை கூர்மையான பார்வை எனக்கு.!..எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டு இருந்தாலும் , தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு சிறிய எறும்பைக் கூட என்னால் காண முடியுமே!...மட்டுமின்றி , எத்தனை வலிமையானவை என் சிறகுகள்.! அவற்றைக் கொண்டு வானத்தைத் தொட்டபடி உலகின் எந்த மூலைக்கும் விரைந்து பறப்பேனே!  '
இப்படி அதன்  மனம் முழுவதும்   ..ஆணவமும் , பெருமையும் கலந்த மகிழ்ச்சியான எண்ண  அலைகள்  அடுக்கடுக்காய் தோன்றி தோன்றி மறைந்து கொண்டிருக்க ........
   ...தரையில் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு ஜீவனையும் அலட்சியமாகப் பார்த்து, கேலியாக சிரித்து ெகாண்டிருந்தது அது ...! .
அப்போது  ......
அதன் கண்களில் பட்டது ஒரு யானை ...!
உடனே அது அந்த யானையின்  அருகே பறந்து வந்ததோடு மட்டுமின்றி ,   கேலியாக அதனை பார்த்து சிரிக்கவும்  துவங்கியது   ....!
யானைக்கு அதன் செய்கை  புரியவில்லை. ....
குழப்பமான, கண்களால் கழுகை ஏறிட்டது அது ..! .அதன் பார்வையை புரிந்து கொண்டது போல கழுகு ,    
"......என்ன அப்படி பார்க்கிறே  ?....எனக்கு உன்னை பார்த்தால்  சிரிப்பு தான் வருது ......தரைவாழ் உயிர்களிலேயே நீ தான் பெரிய மிருகம்னும் , பலசாலின்னும் சொல்றாங்க. ...ஆனாலும் என்னை மாதிரி உன்னால் பறக்க முடியாதே!.... ஆமா ...நான் தெரியாம தான் கேக்கறேன் ........!  ,  .....தரையிலேயே பிறந்து, தரையிலேயே வளர்ந்து , தரையிலேயே சாகப்போற. உனக்கு எதுக்கு இந்த பலசாலிங்குற பட்டம் ?.......உயரத்தில் பறந்து திரியும் நான்தான் உண்மையிலேயே உயர்வான ஜீவன்  .! "
கர்வமும் ,   அகந்தையுமாய் பேசிய அதை பார்த்து யானை அமைதியாய்  ,  ... 
 " ...எல்லாம்  சரி தான் ...நீ ஒன்றை புரிந்து கொள்ள    வேண்டும் .. .நான்  தரையில்  திரிந்த போதும்  , என் கண்கள் வானத்தை (பரலோகத்தை) நோக்கியபடிதான் நான் பிளிறுவேன்.....ஆனால் நீயோ உயர்ந்த வானத்தில் சஞ்சரித்தாலும் , உன் கண்கள் (பூமியில்) குப்பையில் கிடக்கும் அழுகிப்போன பிணத்தைத்தானே தேடுகின்றன?....ஆக , நாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பதை விட ,  எதன் மேல் "நோக்கமாய்" இருக்கிறோம் என்பதில்தான் "உயர்வு" இருக்கிறது ...புரிகிறதா ..? ''
என்றது அமர்த்தலான சிரிப்புடன் ;
இந்த பதிலை   கேட்டு கழுகு வெட்கி  பறந்து போனது .....!!

உண்மை .....
"அகந்தை" வந்தால் இலச்சையும் வரும் .....!
நல்ல "சிந்தை"யுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு .....!

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி