-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, June 4, 2015

ஆருட இலக்கிணம்

வாழ்க்கை எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சுகமாகவும் அதே சமயம் எல்லா காலங்களிலும் சோகமாகவும் இருந்ததில்லை. சுகமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கை. இப்படிப்பட்ட வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் அடையக்கூடிய பலன் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத் தான் அனைவரும் ஜோதிடத்தை நாடுகிறோம். ஜாதகத்தில் ஒரு கிரகத்தை வைத்தோ அல்லது ஒரு பாவத்தை வைத்தோ முழுப்பலனையும் அறிய முயல்வது தவறானது. இது இலக்கிணம் மற்றும் ராசி தவிர்த்து மற்ற கிரகங்களுக்குத் தான் பொருந்தும். இலக்கிணமும் ராசியும் சரியாக அமைந்து விட்டால் மற்ற கிரகங்களின் பங்களிப்பும் நல்லதாகவே முடியும். அந்த வகையில் ஆருட இலக்கிணம் எனப்படும் இலக்கிண பாவத்தின் பதம் பற்றி காணலாம்.

ஆருட இலக்கிணம் என்பது, லக்கிணத்திலிருந்து லக்கினாதிபதி இருக்கும் வீடு வரை எண்ணி வரும் தொகையை லக்கினாதிபதி முதல் எண்ணக் கிடைக்கும் இராசியே ஆருட இலக்கிணம் எனப்படும். உதாரணமாக, ரிசப இலக்கிணம் இலக்கிணாதிபதி சுக்கிரன் எட்டில் தனுசில் இருப்பதாகக் கொண்டால், தனுசு முதல் எட்டு எண்ணக் கிடைக்கும் கடகம் தான் ஆருட இலக்கினம் ஆகும்.  

ஆருட லக்னத்தில் சுப கிரகங்களோ அல்லது சுப கிரகங்களின் பார்வைகளோ இருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் சுகங்கள் அதிகமாக இருக்கும். மற்ற கிரக சூழ்நிலைகளால் சோகங்கள் வந்தாலும் விரைவில் அகன்று விடும் அல்லது ஜாதகர் அதைக் கண்டு கலங்காத திடமான மனநிலையில் இருப்பார் என்பது நிச்சயம்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி