-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, April 24, 2015

agathiyar-arudam-tamil-2-1-2


பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, 6 என்று குறிப்பிட்டு மூன்று முறை உருட்ட வேண்டும். கிடைக்கும் எண்களின் அடிப்படையில் பலன்களை அகத்திய முனிவர் அருளியுள்ளார். இதில் முதல் முறை இரண்டும் இரண்டாம் முறை ஒன்றும் மூன்றாம் முறை இரண்டும் வந்தால் நிகழக்கூடிய நிகழ்வுகளின் தொகுப்பாக அகத்தியர் உரைப்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது



பாடல் 2-1-2

கூடுமேயெண்ணமெல்லாம் கூறும் ரெண்டொன்றும் ரெண்டும்
ஓடுமே வினையெல்லாம் உடன்பிறந்தோரால் நன்மை
தேடுமுன் கிடைக்குமப்பா தொழிலது நீடித்தோங்கும்
கோடுசொல் தவறிடாத கோமான் போல் வாழ்குவாயே.

விளக்கம்.

தற்போது இரண்டும், ஒன்றும், இரண்டும் விழுந்தால் பொல்லாத நோயும், தீவினைகளும் நீங்கும். உன்னுடன் பிறந்தவர்களால் வேண்டிய லாபமுண்டாகும். நாடிய பொருள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். தொழில் தழைத்து ஓங்கும், தனவந்தனாக வாழ்வாய் என்கிறார்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி