-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, April 17, 2020

60 வருட தமிழ் ஆண்டுகள்


வான் மண்டலம் அல்லது ராசி மண்டலத் தொகுதி ஒரு வட்டப் பாதையாக 360 பாகைகளைக் (degree) கொண்டு விளங்குகிறது. ஜோதிடம் குறிப்பிட்ட 27 நட்சத்திரங்களும் 9 கோள்களும் 12 இராசிகளும் இப் பாதையில் தான் பயணிக்கின்றன.

சுபகிரகமான குரு ஒரு ராசியைக் கடப்பதற்கு சுமார் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்ளும் சனி ஒரு பாகை நகர சுமார் ஒரு மாதம் ஆகும். எனவே குரு ஒரு தடவை இராசி மண்டலத்தைச் சுற்றி வர 12 வருடமும் சனி ஒரு தடவை சுற்றி வர 30 வருடங்களும் எடுத்துக் கொள்கின்றன.
சனியும் குருவும் சேர்ந்து அசுவதி நக்ஷத்திரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை காணப்படுகிறது. அதுவே பிரபவ வருடம்-இதுவே முதல் வருடம். இதிலிருந்து 60 வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. 

தமிழ் ஆண்டிற்குரிய பழக்கத்தில் உள்ள பெயர்களும் அதற்குரிய தமிழ்ப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.முடிந்த வரை நாம் மனனம் செய்து கொண்டால் மிக்க நலம். மேலும் நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களையும் மனப்பாடம் செய்ய வைத்தல் மிக்க நலம்.



பெயர்
பெயர் (தமிழில்)
பெயர் (ஆங்கிலத்தில்)
 ஆண்டு
1
பிரபவ
நற்றோன்றல்
Prabhava
1987–1988
2
விபவ
உயர்தோன்றல்
Vibhava
1988–1989
3
சுக்ல
வெள்ளொளி
Sukla
1989–1990
4
பிரமோதூத
பேருவகை
Pramodoota
1990–1991
5
பிரசோற்பத்தி
மக்கட்செல்வம்
Prachorpaththi
1991–1992
6
ஆங்கீரச
அயல்முனி
Aangirasa
1992–1993
7
ஸ்ரீமுக
திருமுகம்
Srimukha
1993–1994
8
பவ
தோற்றம்
Bhava
1994–1995
9
யுவ
இளமை
Yuva
1995–1996
10
தாது
மாழை
Dhaatu
1996–1997
11
ஈஸ்வர
ஈச்சுரம்
Eesvara
1997–1998
12
வெகுதானிய
கூலவளம்
Bahudhanya
1998–1999
13
பிரமாதி
முன்மை
Pramathi
1999–2000
14
விக்கிரம
நேர்நிரல்
Vikrama
2000–2001
15
விஷு
விளைபயன்
Vishu
2001–2002
16
சித்திரபானு
ஓவியக்கதிர்
Chitrabaanu
2002–2003
17
சுபானு
நற்கதிர்
Subhaanu
2003–2004
18
தாரண
தாங்கெழில்
Dhaarana
2004–2005
19
பார்த்திப
நிலவரையன்
Paarthiba
2005–2006
20
விய
விரிமாண்பு
Viya
2006–2007
21
சர்வசித்து
முற்றறிவு யாவுந்திறல் [13]
Sarvajith
2007–2008
22
சர்வதாரி
முழுநிறைவு
Sarvadhari
2008–2009
23
விரோதி
தீர்பகை
Virodhi
2009–2010
24
விக்ருதி
வளமாற்றம்
Vikruthi
2010–2011
25
கர
செய்நேர்த்தி
Kara
2011–2012
26
நந்தன
நற்குழவி
Nandhana
2012–2013
27
விஜய
உயர்வாகை
Vijaya
2013–2014
28
ஜய
வாகை
Jaya
2014–2015
29
மன்மத
காதன்மை
Manmatha
2015–2016
30
துன்முகி
வெம்முகம்
Dhunmuki
2016–2017
31
ஹேவிளம்பி
பொற்றடை
Hevilambi
2017–2018
32
விளம்பி
அட்டி
Vilambi
2018–2019
33
விகாரி
எழில்மாறல்
Vikari
2019–2020
34
சார்வரி
வீறியெழல்
Sarvari
2020–2021
35
பிலவ
கீழறை
Plava
2021–2022
36
சுபகிருது
நற்செய்கை
Subakrith
2022–2023
37
சோபகிருது
மங்கலம்
Sobakrith
2023–2024
38
குரோதி
பகைக்கேடு
Krodhi
2024–2025
39
விசுவாசுவ
உலகநிறைவு
Visuvaasuva
2025–2026
40
பரபாவ
அருட்டோற்றம்
Parabhaava
2026–2027
41
பிலவங்க
நச்சுப்புழை
Plavanga
2027–2028
42
கீலக
பிணைவிரகு
Keelaka
2028–2029
43
சௌமிய
அழகு
Saumya
2029–2030
44
சாதாரண
பொதுநிலை
Sadharana
2030–2031
45
விரோதகிருது
இகல்வீறு
Virodhikrithu
2031–2032
46
பரிதாபி
கழிவிரக்கம்
Paridhaabi
2032–2033
47
பிரமாதீச
நற்றலைமை
Pramaadhisa
2033–2034
48
ஆனந்த
பெருமகிழ்ச்சி
Aanandha
2034–2035
49
ராட்சச
பெருமறம்
Rakshasa
2035–2036
50
நள
தாமரை
Nala
2036–2037
51
பிங்கள
பொன்மை
Pingala
2037–2038
52
காளயுக்தி
கருமைவீச்சு
Kalayukthi
2038–2039
53
சித்தார்த்தி
முன்னியமுடிதல்
Siddharthi
2039–2040
54
ரௌத்திரி
அழலி
Raudhri
2040–2041
55
துன்மதி
கொடுமதி
Dunmathi
2041–2042
56
துந்துபி
பேரிகை
Dhundubhi
2042–2043
57
ருத்ரோத்காரி
ஒடுங்கி
Rudhrodhgaari
2043–2044
58
ரக்தாட்சி
செம்மை
Raktakshi
2044–2045
59
குரோதன
எதிரேற்றம்
Krodhana
2045–2046
60
அட்சய
வளங்கலன்
Akshaya
2046–2047







வாசிப்போர் அனைவருக்கும் வணக்கங்களுடன் உங்கள்
வேத ஜோதிடம்.










































































































































































































































No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி