-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Sunday, July 19, 2020

தத்துவங்கள் வெறும் வார்த்தைகளா

இணையம் முழுவதும் தத்துவங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதை பயன்படுத்தும் வழிமுறைகள் தான் இன்னும் நமக்கு தெரியவில்லை. அறம் செய்ய விரும்பு என்று ஔவை கூறி ஆண்டுகள் பல ஆயிற்று. இன்னும் விரும்ப கூட நமக்கு மனமில்லை. காரணம் அறம் என்பதன் அர்த்தம் புரியவில்லை.

தினமும் லட்சம் தத்துவங்கள் பரிமாறப்படுகின்றன, வெறும் வார்த்தைகளால். அதில் ஒன்றே யாயினும் நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்தால் இந்நேரம் பழைய தத்துவங்கள் பழகிப்போய் புதிய தத்துவங்களின் தேவை ஏற்பட்டிருக்கும்.

எண்ணங்கள்தான் வாழ்க்கை. பைசா செலவில்லாமல் நல்லதை நினைக்க கூட நமக்கு மனம் இல்லை. அப்படியே நினைத்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு வெட்கப்படுகிறோம். அப்படி நடைமுறைப்படுத்தியும் பலன் கிடைக்கவில்லை என்றால் விரக்தி  ஆகிவிடுகிறோம் அதனால் மீண்டும் எண்ணுவதற்கு தயங்குகிறோம்.

தொடர்ந்து முயற்சி செய்வோம்.
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.


No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி