-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, June 9, 2017

விதி - எப்படி உருவாகிறது

விதி எங்கே எப்படி உருவாகிறது.


மனிதன் தன் பிறப்பிற்கு தானே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது. 


நாம் செய்த வினையின் பலன் நம்மை நிச்சயம் வந்து சேரும். தனி மனிதனுக்கு செய்த நன்மையும் தீமையும் தனிமனிதன் மூலமும், சமுதாயத்திற்கு செய்த செயலின் விளைவுகள் சமுதாயத்தின் மூலமாகவும் இயற்கைக்கு செய்த செயல்கள் இயற்கையாலும் வந்து சேரும். 

சொல்லால் ஒருவரை காயப்படுத்தியிருந்தால் அந்த சொல்லாலே நாம் காயப்பட வேண்டியிருக்கும். உடலால் ஒருவருக்கு தீங்கு செய்தால் அந்த உடலால் நாம் துன்பம் அனுபவிக்க நேரிடும். எண்ணங்களால் நாம் தீங்கு நினைத்திருந்தோமானால் கனவுகளாலும் கற்பனைகளாலும் நமக்கு நாமே நொந்து கொள்வோம். 

விரிவாக மீண்டும்...

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி