-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, March 13, 2015

எந்த நாளில் எந்த செயலைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும்.

எந்த நாளில் எந்த செயலைத் துவங்கினால் வெற்றி கிடைக்கும்.

நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பது முதுமொழி. இயற்கையின் விதிப்படி நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் இயற்கை நிச்சயம் துணை புரியும்.
நட்சததிரக்கூட்டங்களிலிருந்து வரும் காந்த அலைகள் புவியில் வாழும் உயிர்களிடத்தில் ஒருவித தாக்கத்தை உருவாக்குகிறது. இதைத்தான் நட்சத்திரங்களின் குணாதிசயங்கள் என்று கூறுகிறோம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதியங்கள் உண்டு.   நட்சத்திரத்தின் காந்த அலைகளும் உயிர்களின் எண்ண உணர்வலைகளும் ஒரு நேர்கோட்டில் சந்திக்குமானால் எண்ணங்கள் வலிமை பெறும். நல்ல தெளிந்த சிந்தனையும் செயலும் உருவாகும். அதனால் எடுத்த காரியம் விரைவாக சிறப்பாக நடைபெறும். இதைத்தான் நாள் செய்யாததை நல்லோர் செய்யார்  என்கின்றனர்.

அதற்காக ஒவ்வொரு நாளும் பொழுதும் ஜோதிடத்தைப் பார்த்த படியே நடந்து
கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி பிறக்கும். தினந்தோரும் நாம் புதிய
செயல்களையோ முயற்சிகளையோ மேற்கொள்வதில்லை. எப்பொழுது ஒரு புதிய செயல் துவங்கப் படுகிறதோ அப்பொழுது உள்ள கிரக அமைப்பிற்கான சூழ்நிலைகள் அந்தச் செயலுக்கு காரணிகளாக அமைகின்றன.  விதை விதைக்கப்படும் போது பருவகாலம் சரியாக இருந்தால் தான் விளைச்சல் நன்றாக இருக்கும். இது தான் இயற்கை.  ஒவ்வொரு செயலுக்குரிய சாதகமான கால சூழ்நிலைகளைத் தான் ஜோதிடம் தெரிவிக்கிறது. இதைத் தான் ஜோதிடத்தில் முகூர்த்தகாலங்கள் என்று அழைக்கின்றோம்.

அப்படியென்றால் ஜெனன ஜாதகத்தில் கூறப்பட்ட பலன்களை இந்த முகூர்த்த
காலங்கள் மாற்றிவிடுமா என்றால் இல்லை. பிறக்கும் போது இருக்கும் கிரக
சூழ்நிலைகளின்படித் தான் விளைவுகள் அமையும். அதே சமயம், விளைவுகளின் வீரியத்தை முகூர்த்தங்கள் கூட்டவோ குறைக்கவோ செய்யும். ஆனால் விளைவுகள் மாறாது.

ஒவ்வொரு நட்சத்திரங்களும் நடப்பில் உள்ள காலங்களில் செய்ய உகந்த செயல்களை நட்சத்திரங்களின் வரிசைப்படி இனி காணலாம்.



No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி