-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, August 3, 2012

ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?

ஜோதிடம் பார்க்காவிட்டால் என்ன இழப்பு?

முறையாக முழுமையாக முயற்சி செய்யாதவன் எதையெல்லாம் இழந்து விடுவானோ அதையெல்லாம் இழந்து விடுவோம்.

நம்முடைய வாழ்க்கை என்பது தனியானதல்ல. ஒருவைரையொருவர் தொடர்பு கொண்டது. ஒன்றை ஒன்று சார்ந்த ஒன்று.  நான் யாரைச் சார்ந்துள்ளேன் என்னை யாரெல்லாம் சார்ந்துள்ளார்கள் என்று கவனிக்கத் தவறியவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
1.
இயற்கையின் ஓட்டத்தில் நாமும் சேர்ந்து தான் ஓட வேண்டும். எதிர்க்கக்கூடாது. நிலம் நீர் காற்று வான் நெருப்பு ஆகிய இயற்கையை நாம் எப்பொழுது கணிக்கக் கற்றுக்கொள்கிறோமோ அப்பொழுது தான் அதனுடன் இயைந்த வாழ்க்கையை நம்மால் கடைப்பிடிக்க முடியும்.
2.
ஆட்சியாளர்கள் மற்றும் நாம் சார்ந்துள்ள பொறுப்பாளர்கள். அவர்களின் முடிவு நம் வாழ்க்கையை மாற்றத்தக்கது. அடுத்த வீட்டுக்காரன் என் முடிவை மாற்ற முடியாது. ஆனால் என் பெற்றோருக்கு செவி சாய்க்க வேண்டும்.  அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும். வரியும் போரும் ஆட்சியாளர்கள் கையில் அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மறுக்க முடியாது.
3
நம்மை சார்ந்த நம் சமூகம். அதில் மொழி மதம் இனம் குடும்பம் இப்படி ஏராளம் இதில் எதையும் நாம் ஒதுக்கி விட முடியும் ஆனால் அப்படி ஒதுக்க ஆரம்பித்தால் நாம் நம் அடையாளத்தை தொலைத்துவிடுவோம்.
4
இது தான் நாம். நான் என்று கூட சொல்லலாம். முழு முடிவுக்கு சொந்தக் காரன். இந்த நான் மேற்கூறிய அனைத்திற்கும் கட்டுப்பட்டது. ஆனால் முடிந்தவரை மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. அந்த வல்லமை தான் தகுதியுள்ள முயற்சி. அந்த முயற்சி வெற்றி பெற மேற்கூறிய அனைத்தின் போக்கையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். அதாவது முதலில் எனக்கு என்ன தெரியும் என்னால் என்ன முடியும் என்பதை அறிந்து முயற்சி செய்ய வேண்டும். இந்த கேள்விகளுக்கு பதில் தான் ஜோதிடம்.

ஒருவனின் வாழ்வாதாரத்திற்கு எப்படியும் சம்பாதிக்க முடியும். ஆனால் ஜோதிடம் உணர்ந்த ஒருவனால் மட்டுமே திருப்தியான முறையில் சம்பாதித்து அதை அனுபவிக்க முடியும்.

பெரும்பாலும் 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த அனைவராலும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லையே ஏன்? 10ம் வகுப்பு வரை அனைவருக்கும் பொதுவாகிவிடுகிறது. அதற்கு பின் தான் தனித்துவம் என்று வரும் போது நமக்கு ஒவ்வாத பாடத்தை தேர்வு செய்வதால் கல்வியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் நமக்கு எந்த துறை வெற்றியைத் தரும் என்பதறிந்தால் நிச்சயமாக அந்தத் துறையில் சாதனை செய்யலாம். அதற்கு தான் ஜோதிடம் உணருதல் வேண்டும்.

உணருதல் தொடரும்

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி