-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Thursday, August 2, 2012

எதிர்காலத் திட்டமிடுதலும் ஜோதிடமும்

எதிர்காலத் திட்டமிடுதலும் ஜோதிடமும்

திட்டமிடுதல் என்பது எதிர்காலத்தில் நாம் நினைத்ததை சாதிப்பதற்கு நாம் இப்பொழுதிருந்தே செய்யக்கூடிய செயல்களைக் குறிக்கிறது.

உதாரணமாக நாம் சொந்தமாக வீடு கட்ட நினைக்கிறோம் . இன்னும் 3 ஆண்டுகளில் வீட கட்ட திட்டமிடுகிறோம் அதற்கான பொருளாதார நிலைகளை மேம்படுத்த நாம் முயற்சி செய்கிறோம். அது எவ்வாறு நிறைவேறப் போகிறது அல்லது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதை இப்பொழுதே நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் நமக்கு சொந்த வீடு கட்ட யோகம் உண்டா என்று பார்க்க வேண்டும். அந்த யோகம் இல்லாமல் நீங்கள் வீடு கட்டினாலும் உங்களால் திருப்தியாக அனுபவிக்க முடியாது.  சரி. யோகம் உண்டு என்றாலும் அது எப்பொழுது நிறைவேறும் என்று கணிக்க வேண்டும். நடப்பு திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சுமகாலங்கள் நமக்கு சாதகமாக உள்ளனவா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  பத்தாண்டு திட்டமானாலும் அந்த திட்டம் நிறைவேறும் சமயம் அதை அனுபவிக்க நமக்கு யோகம் உண்டா என்று தீர்மானித்த பின்னரே திட்டமிடுதல் வேண்டும் அப்படி செய்தால் உங்களுடைய திட்டமிடுதல் 100 சதவீதம் நிறைவேறும்.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். அந்த முயற்சி வெற்றியடையக் கூடிய காலத்தை ஜோதிடம் உணர்த்துகிறது. இயற்கையை மீறி நாம் எதுவும் செய்ய முடியாது. இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை நாம் வாழ பழகிக் கொள்வது நல்லது. அந்த இயற்கையை நமக்கு உணர்துவது தான் ஜோதிடம். 

உணருதல் தொடரும்

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி