-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Friday, July 10, 2020

எல்லாம் நிரந்தரம் எதுவும் மாறப்போவதில்லை

எல்லாம் நிரந்தரம் எதுவும் மாறப்போவதில்லை. இந்த உலகம் நிரந்தரமானது.  இயற்கை நிரந்தரமானது. சூரியனும் சந்திரனும் கோள்களும் நிரந்தரமானவை. தனிமனித பிறப்பும் இறப்பும் நிரந்தரமானது. தோற்றமும் அழிவும் நிரந்தரமானது. எல்லாம் நிரந்தரம் எதுவும் மாறப்போவதில்லை. ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்று ஏன் கூறுகிறார்கள் மாற்றம் என்பது அடிப்படை மாற்றம் அல்ல.  உங்களுடைய எண்ணங்களில் ஏற்படும் செயல்களில் ஏற்படும் மாற்றங்கள் தான் மாறாதது என்று சொல்கிறார்களே தவிர அடிப்படை எதுவும் மாறக்கூடியது அல்ல.  மாற்றவும் முடியாது. எல்லாம் நிரந்தரம். இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்னுடைய வாழ்க்கை முறை தினந்தோறும் மாறிக்கொண்டே தானே இருக்கிறது. 

என் முப்பாட்டன் வாழ்ந்த காலத்திலிருந்த பழக்கவழக்கங்கள் என் பாட்டனாரிடம் இல்லை. என் பாட்டனிடம் இருந்தது என் தந்தை காலத்தில் மாறி விட்டது.  என் தந்தையாரிடம் இருக்கக்கூடிய எண்ணங்கள் எனக்கும் இருக்கவேண்டிய அவசியமில்லை. இருக்கவும் இல்லை.  இதுதான் மாற்றம் எனப்படுகிறது. இந்த மாற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறதா? இல்லை. ஏன்?  மாற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.  ஆனால் அதனுடைய  அடிப்படைத்தேவைகள் மாறுவதில்லை.  உதாரணமாக நாம் உண்ணும் உணவை எடுத்துக் கொள்வோம். நாம் உயிர்வாழ்வதற்கு உணவு என்ற ஒன்று மிக மிக அவசியமான அடிப்படையான ஒன்று. நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்பு இருந்த உணவு பழக்கவழக்கங்கள் உணவு பண்டங்கள்  இப்பொழுது இல்லை. இருக்கும் முறைகளும் நாளை அப்படியே கடைப்பிடிக்கப்படும் என்பதிலும் உறுதியில்லை. இங்கே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்பது ஒரு சாரார் கருத்து. ஆம் இன்று பீட்சாவும் பர்கரும் சாப்பிட முன்வந்த நாம் கடந்த தலைமுறையில் இட்லியை மிகப்பெரிய உணவாக கருதினோம் அதற்கு முன்பு வேக வைத்த பொருட்களை விரும்பினோம் அதற்கு முன்பு பச்சையான காய்கறிகளையும் விரும்பினோம் அன்றிலிருந்து இன்றுவரை உணவு முறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  நம் நாவின் ருசிக்கும் திறன் கூட மாறிக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படி என்றால் எல்லாம் மாறிவிட்டது என்று தானே அர்த்தம்.  ஆம் எல்லாம் மாறிவிட்டது. ஆனால் ஆனால் பசி நிரந்தரமாகத் தானே  இருக்கிறது.  பசி என்ற ஒன்று இல்லை என்றால் உங்களுடைய உணவு பழக்கங்கள், உணவுகள், நாவின் ருசி எதற்கும் பயனில்லாமல் போய்விடும். இங்கே நிரந்தரம் என்று குறிப்பிடப்படுவது பசி என்ற ஒன்று தான்.  அந்த பசி என்ற ஒன்றுக்காக நாம் செய்யும் முயற்சிகள் அதனுடைய விளைவுகள் தான் மாறிக்கொண்டிருக்கின்றன தவிர அடிப்படையில் பசி என்ற ஒன்று மாறாதது மாற்றவும் முடியாது.  இந்தக் கருத்தில் தான் ஜோதிடத்தை அணுகமுடியும்.  ஜோதிடத்தில் கூறப்படும் கருத்துக்கள், அடிப்படை கருத்துக்கள். வாழ்வில் முக்கியமான, தேவையான கருத்துக்கள்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி