-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, July 31, 2012

விதி என்பது ?

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?


விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.  நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.  இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி. 

அது தான் விதி.  பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி