-->
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்

Tuesday, October 1, 2013

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்

தாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் 

இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு. ஒன்று வேலை மற்றொன்று  திருமணம். இந்த இரண்டும் நிறையப் பேருக்கு சரியான காலத்தில் அமைவதில்லை. எதற்காக இந்த இரண்டிற்கு மட்டும் அதிக முக்கியத்துவம். உடல் மற்றும் மனத் தேவைகளுக்காக திருமணமும்கௌரவம் மற்றும் பொருளுளகத் தேவைகளுக்காக வேலையும் கட்டாயம் தேவைப் படுகிறது. காலம் தவறிய திருமணம், தேவையை நிவர்த்தி செய்யாத வேலையும் திருப்தியைத் தருவதில்லை. இந்த இரண்டில் எதற்கு மிக முக்கயத்துவம் என்றால் அது திருமணத்திற்குத் தான்.

காரணம்.  தான் அன்பு செலுத்த கிடைக்கும் வாய்ப்பு திருமணத்தின் மூலம் தான் பெரும்பாலோருக்கு கிடைக்கிறது.  நான் என்றவரைத் நாம் என்று ஆக்குவது தான் திருமணம். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கை விரைவில் வந்து விட்டால் நிம்மதியாக மற்ற தேவைகளுக்காக தேட ஆரம்பிக்கலாம். சரி. எப்பொழுது திருமணம் கைகூடும்.

ஜாதகப் பலன்கள் நடக்கக்கூடிய கால நேரங்களை அறிந்து கொள்ள உதவுவது திசா புத்தி அந்தரங்கள் தான்.  கோச்சார நிலை அக்காலத்தை உறுதிப்படுத்துமேயன்றி உருவாக்காது. பொதுவாக இரண்டாம் அதிபதி புத்தி அல்லது அந்தர காலங்களில் திருமணம் நடப்பது அதிகமாக உள்ளது. ஒவ்வொரு திசா நடப்பின் போதும் இரண்டாம் அதிபதி புத்தி காலங்கள் நடக்கும். அதே போல ஒவ்வொரு புத்தி காலங்களிலும் இரண்டாம் அதிபதியின் அந்தர காலங்கள் நடக்கும். இது போன்ற சாதகமான திசா புத்தி அந்தர காலங்களில் கோச்சாரக் கிரகங்களும் சாதகமாக இருந்தால் அந்த காலங்களில் திருமண வாய்ப்புகள் கூடி வரும்.


ஒரு சிலருக்கு இளம் வயதில் (18 – 21) திருமணம் நடைபெறும். ஒரு சிலருக்கு நடுத்தர நிலையில் திருமணம் நடைபெறும் (27-30). ஒரு சிலருக்கு காலம் தாமதமாக திருமணம் நடைபெறும் (30வயதுக்கு மேல்). தாமதத்திருமணம் என்பது வயதின் அடிப்படையில் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஜோதிடம் கூறவருவது என்ன என்றால், திருமணம் செய்துகொள்ள எடுக்கப்படும் முயற்சி எப்பொழுது வெற்றி பெறும் என்பது தான். இந்த வயதில் தான் வெற்றி பெரும் என்பதைவிட இவ்வளவு காலங்கள் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தான் ஜோதிடம் எடுத்துக்கூறுகிறது. எந்த ஒரு நிகழ்வும் முயற்சியின்றி நடைபெறுவதில்லை. ஆனால் முயற்சி வெற்றிபெறுவது விதியின் வசம்.

18 வயதில் மாப்பிள்ளை தேடி ஆரம்பிக்கும் பெண்ணிற்கு 25 வயதில் தான் திருமணம் நடைபெறுகிறது என்றால் அது தாமதத்திருமணம் தான். அதே சமயம் 25ம் வயதில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்த உடனே திருமணம் நடக்கும என்றால் அது இளமைத் திருமணம் தான். திருமணத்திற்கு வரன் தேடுவதில் நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சி வெற்றி பெறப்போகும் காலத்தைத் தான் ஜோதிடம் கூறுகிறது. திருமணத்திற்கான நிலைகள் என்பது இராசிச் சக்கரத்தில் லக்னம், இராசி, இலக்கிணாதிபதி, இராசியாதிபதி, 2, 7, 11ம் பாவங்கள் மற்றும் சுக்கிரன் செவ்வாயின் நிலை. முக்கியமாக கவனிக்க வேண்டியது. லக்னம் மற்றும் 7ம் இடம்

வேதஜோதிடத்திற்கு வந்த ஜாதகத்தின் மூலம் திருமண காலத்திற்கான நிலைகளைப் பார்க்கலாம்.  வாசகர் ஒருவரின் ஜாதகக் குறிப்புகள். ரிசப இலக்கிணம். மீன ராசி. லக்கினத்திற்கு ஏழில் சூரியன், புதன். இராசிக்கு ஏழில் சுக்கிரன் இராகு. அக்டோபர் 77ல் பிறந்தவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

கிரகநிலைக் காரணங்கள்.
இலக்கிணாதிபதி செவ்வாய் நீசம்.
இலக்கணத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் இட அதிபதி சுக்கிரன் நீசம்.
இராசிக்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் நீசம்
இராசிக்கு ஏழில் நீசம் பெற்ற சுக்கிரன் இராகுஉடன்.
இலக்கிணத்திற்கு ஏழில் நீசம் பெற்ற சூரியன்.   
இலக்கிணத்திற்கு 11ம் இடம் மற்றும் இராசிக்கு 11ம் இடம் நீசம் பெற்ற செவ்வாயின் பார்வை.

இது போன்ற கிரக சூழ்நிலைகளால் அவருக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. ஜாதகருக்கு தற்பொழுது சுக்கிர திசை சுக்கிர புத்தி இராகு அந்தரம் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இது திருமணம் நடைபெறக்கூடிய காலம் தான் இருப்பினும் சுக்கிரன் அந்தர காலமான 2013 டிசம்பர் முதல் 2014  ஜனவரி வரை வரக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தி விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்.

பரிகாரம் என்பது நமக்கு விதிக்கப்பட்டதை விருப்பப்படி அனுபவிப்பது தான். ஜோதிடத்தின் முன் அனைவரும் சமம் தான். அனைவருக்கும் சமமான வாய்ப்பைத் தான் இயற்கை வழங்கியுள்ளது. அதைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற பழகிக் கொள்ளவேண்டும்.

வருமுன் காப்போம். -  ஜோதிடத்தை அறிந்து கொள்வதன் முக்கியத்துவமே நம்மை நாம் உணர்ந்துகொள்வது தான். நமக்கு விதிக்கப்பட்டதை நாம் உணர்ந்து அதன்படி நாம் நடந்து கொள்வது தான். தாமத்திருமண கிரக சூழ்நிலைகள் இருந்தால் வெகுவிரைவில் வரன் தேடுதலைத் தொடங்கிவிடுங்கள்.

நன்றி.


1 comment:

  1. Dear Sir,

    I am reading your blog from last 2 months. so much of information's and very useful.

    Also 1 question to you. My cousin searching the grooms to his marriage from last 4 to 5 years but still yet matching any one. He is a 33 years old.he was totally upset. So please check his birth chart and give tips to him. when will done marriage to him.
    His DOB -11 SEPTEMBER 1981
    BIRTH TIME - 6.55 AM
    BIRTH PLACE - BHAVANI(ERODE DISTRICT)

    Awaiting your valuable reply

    Regards
    Sengottaiyan.PK
    Tirupur
    94421-85221

    ReplyDelete

தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி